Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

கடத்தப்பட்ட பச்சிளங் குழந்தையை 6 மணிநேரத்தில் மீட்ட போலீசார்



கோவை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 6 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி ஜோதி, தமது இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மாலையே ஜோதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நோயாளி போல் நடித்து அருகில் உள்ள வார்டில் தங்கியிருந்த அர்ச்சனா என்ற பெண் குழந்தையை கடத்தியுள்ளார்.

மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரனை நடத்தினர். அதில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் டிராவல்ஸ் கார் ஒன்றில், குழந்தையுடன் ஏறிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கார் ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஓட்டுநர் காட்டிய வீட்டில் சோதனை செய்த போது குழந்தை அங்கிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்த நரேஷ், மனைவி அர்ச்சனா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீசார் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு,

தாய் ஜோதியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் விசாரித்தபோது, குழந்தையைத் திருடிச் சென்ற அர்ச்சனா, திருமணமாகி 4 வருடமாக குழந்தை இல்லாததால் கருவுற்று இருப்பதாக 9 மாதமாக குடும்பத்தினரிடம் நடித்துள்ளார். நிறைமாதம் வந்ததும் மருத்துவமனைக்கு வந்து குழந்தையைத் திருடிச் சென்றுள்ளார் என்று தெரியவந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.