ஜிம்பாப்வேவில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் இரவு நேரத்தில் கணவன் மனைவி ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென முதலை வந்ததால் பதறியடித்து இருவரும் மேலே ஓடி வந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜிம்பாவேவை சேர்ந்த தம்பதி ஒருவர் இரவில் ஜாலியாக தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது 6-ஆடி முதலை ஒன்று தீடிரென சீறிப்பாய்ந்து வந்தது. இதனைக்கண்ட கணவன் தனது மனைவியை அப்படியே விட்டு விட்டு நீச்சல் குளத்தில் இருந்து தப்பினார். முதலை உடனடியாக அந்த பெண்ணின் காலை பற்றிக் கொள்ள வேகமாக பாய்ந்தது. முதலையை விரட்ட அந்த ஆண் முயன்றதும் அந்த பெண் சாதுர்யமாக தப்பித்து மேலே ஓடி வந்தார். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ காட்சிகள் அந்த குளத்தின் அருகாமையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த வீடியோவை அவர் தனது யூடியூப் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ஏராளமான மக்கள் தங்களது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 80,000-க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை இதுவரை பார்த்துள்ள நிலையில், அந்த ஆண் முதலில் தனது மனைவியை அப்படியே விட்டுவிட்டு தப்பிய செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.