Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

ஒரே நாளில் இத்தனை கோடி டெபாசிட்டா? அசத்திய வங்கி


நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததோடு, டிசம்பர் 30-ம் தேதி வரை அந்த ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார். இதனால், பொதுமக்கள் வங்கிகளுக்கு பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். நேற்று முதல் பொதுமக்கள் பணத்தை மாற்றியும், தங்கள் கணக்கில் செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ.53 ஆயிரம் கோடி அளவுக்கு மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பெண்களுக்கும் முதியவர்களுக்கும் தனி வரிசை ஏற்படுத்தப்படும் என்றும், சனி, ஞாயிற்றுக்கிழமையில் பெண்கள், முதியவர்கள் பணம் எடுக்க, செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.