November 17, 2016
“500,1000 தடை பற்றி அம்பானி, அதானிக்கு தெரியும்!” பா.ஜ.க. எம்.எல்.ஏ ரகசிய பேச்சு அம்பலம்!!
ராஜஸ்தான் லத்புரா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ பவானி சிங் ராஜாவத். இவரிடம் பேட்டி எடுப்பதாக கூறி இரண்டு நிருபர்கள் சென்றுள்ளனர். பேட்டி எடுத்த பிறகு கேமராவை ஆஃப் செய்து விட்டு, அந்த எம்.எல்.ஏவிடம் கேசுவலாக பேசத் தொடங்கினர்.
அப்போது அந்த உரையாடல்களை ஒரு நிருபர் ரகசிய கேமராவில் படம் பிடிக்கத் தொடங்கினார். அப்போது அந்த எம்.எல்.ஏ, இந்த தடை பற்றி அம்பானி, அதானி மற்றும் சிலருக்கு முன்கூட்டியே தெரியும் என்ற அர்த்தத்தில் பேசினார்.
பின்னர் இந்த ரகசிய வீடியோ தேசிய ஆங்கில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எம்.எல்.ஏ பவானி சிங் ராஜாவத் கூறும் போது, அந்த செய்தியாளர்கள் தங்களது தொழில் தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு விட்டனர் என வேதனை தெரிவித்துள்ளார்.
“500,1000 தடை பற்றி அம்பானி, அதானிக்கு தெரியும்!” பா.ஜ.க. எம்.எல்.ஏ ரகசிய பேச்சு அம்பலம்!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.