Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

தனியார் மருத்துவமனையில் 500 வாங்காததால் குழந்தை பரிதாப பலி



தனியார் மருத்துவமனையில் 500 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்து சிகிச்சையளிக்காததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஜகதீஷ் சர்மா. இவர் கடந்த 8ம் தேதி கர்ப்பினியான தனது மனைவியை  கிரணை தனியார் மருத்துவமனைக்கு மருத்துவபரிசோதனைக்காக அழைத்து சென்றார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அடுத்த மாதம் 7ம் தேதி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கும்படி மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சர்மா தனது மனைவியுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் 9ம் தேதி இரவு திடீரென கிரணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, வீட்டிலேயே குழந்தை பிறந்தது. உடனடியாக தாயும், சேயும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சையளிப்பதற்கு ரூ.6ஆயிரம் டெபாசிட் செய்ய மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. சர்மா, தன்னிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களாக  செலுத்துவதாக கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நிர்வாகம், 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களாக செலுத்தும்படி கூறிவிட்டது.
பணத்தை மாற்றி தருவதற்கு சர்மா கால அவகாசம் கேட்டும் சிகிச்சையளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் மனைவியையும், குழந்தையையும் அவர் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சிகிச்சையளிப்பதற்கு முன்னரே குழந்தை இறந்துவிட்டது. இது குறித்து சிவாஜி நகர் காவல்நிலையத்தில் சர்மா புகார் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.