November 20, 2016
மோடி'யின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு 'தவறானது'.. ரகுராம் ராஜன் அதிரடி..!
தினசரி செலவிற்கான பண தேவையை பூர்த்தி செய்ய வங்கி வாசலில் மக்கள் நிற்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது மோடி அறிவிப்பு. ஆனால் இது தவறானது முடிவு என இந்தியாவின் சிறந்த ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜன்
இந்தியா மற்றும் இந்தியர்களிடம் புதைந்துகிடக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாகப் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லா காகிதம் என அறிவித்த நிலையில். மத்திய அரசு கொடுத்துள்ள 50 நாட்களுக்குள் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி மற்றும் தபால் நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். இளையஞர்கள் மத்தியில் இந்தப் புதிய முயற்சியின் மூலம் நாட்டின் வளர்ச்சியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. ஆனால் இந்திய இத்தகைய செயலை ஏற்கனவே செய்துள்ளது. சரி மோடியின் அறிவிப்பு குறித்து நம் எல்லோருக்கும் பிடித்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் என்ன கூறுகிறார்.
ரகுராம் ராஜன்
மத்திய அரசின் இந்த அறிவிப்பு சரியானது எனக்கு நம்பிக்கையில்லை. நாட்டின் கருப்புப் பணத்தைக் களைவதற்காகப் பழைய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது சரியான தேர்வில்லை. இந்தியாவில் இதுவரை அறிவிக்கப்பட்ட இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் கருப்புப் பணத்தை முழுமையாகக் களையும் வகையிலும், எப்படிக் கணக்கில் காட்டப்படாத பணம் கிடைத்தது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருந்தது. கருப்புப் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அரசுக்குத் தெரிய வரும்போது கருப்ப பணத்தை ஒழிக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க முடியும்.
கருப்புப் பணம்
இந்தியாவில் கருப்புப் பணம் வெறும் பணமாக மட்டுமில்லை, தங்கமாக அதிகளவில் புதைந்துகிடக்கிறது. மேலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற மக்களிடத்தில் பல வழிகள் உண்டு, இதில் எளிமையான வழி கோவில் உண்டியலில் பணத்தைப் போடுவது. கருப்புப் பணத்தை ஒரு நாட்டில் இருந்து முழுமையாக ஒழிப்பது என்பது எளிமையாகச் செயல் இல்லை.
அதிகளவிலான சலுகை
அதிகளவிலான சலுகை என்னுடைய கணிப்பின் படி கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு அதிகளவிலான சலுகையை அளிக்க வேண்டும், குறிப்பாக வரி விதிப்பில். இவ்வாறு சலுகைகளை அளிப்பதன் மூலம் அதிகளவிலான கருப்புப் பணம் கணக்கில் வரும்.
வரி விதிப்பு
வரி விதிப்பு என்னுடைய ஆய்வில் இந்தியாவில் மிகவும் குறைவான வரி விதிப்பு மட்டுமே உள்ளது. தற்போதைய நிலையில் அதிக வருமானம் பெறுவோருக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வட்டி விகிதம் 33 சதவீதம், அமெக்காவில் 39 சதவீதம் மற்றும் மாநில வரிகளுடன் கிட்டத்தட்ட 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
கருப்புப் பணம் அவசியமில்லை
கருப்புப் பணம் அவசியமில்லை இந்தியாவில் குறைந்த அளவிலான வரியை மட்டுமே விதிக்கப்படும் நிலையில் கருப்புப் பணம் சேர்க்க வேண்டும் என்ற காரணம் இந்தியர்களிடம் இருக்க வேண்டியது அவசியமில்லை.
ஆய்வுகள்
ஆய்வுகள் ஆயினும் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கருப்புப் பணத்தில் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதினால் சரியான தகவல்களைக் கொண்டு முறையான வரி மற்றும் சலுகையை அறிவித்தாலே போது கருப்புப் பணத்தை எளிமையாகக் குறைக்க முடியும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
மோடி'யின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு 'தவறானது'.. ரகுராம் ராஜன் அதிரடி..!
Reviewed by மறத்தமிழன்
on
November 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.