Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 14, 2016

ரூ. 500, 1000 பிரச்சனை தீரும் வரை இலவசமாக உணவு வழங்கும் ஹோட்டல்!



ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை பயன்படுத்தி சிலர் அதனை தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். 500 ரூபாய்க்கு தான் பெட்ரோல் தருவோம் என சில நிறுவனங்கள் கூறி வருகின்றன. 500 ரூபாய்க்கு தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்றும் சில ஹோட்டல்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் இதற்கு எதிராக மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்ட ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  மராட்டிய மாநிலம் அகோலாவில் உள்ள ஹோட்டலில் அனைவருக்கும் இலவச உணவுகளை வழங்கி வருகிறார் அதன் உரிமையாளர்.
சிலர் தன்னிடம் வந்து, நான் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே வைத்திருக்கிறேன். நான் இங்கு சாப்பிட்டு கொள்ளலாமா? என கேட்கின்றனர். இது எனது மனதை பாதித்து விட்டது. இதனால் தான் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவித்துவிட்டேன் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.