November 11, 2016
மூட்டை மூட்டையாக எரிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
கடந்த 8-ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கையில் உள்ள பழைய நோட்டை வங்கியில் டெபாசிட் செய்து புதிய ரூபாய் நோட்டை பெறலாம் என கூறப்பட்டது.
கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்கவே இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருமித்தே வருகின்றன. ஆனால் கருப்பு பணம் கோடி கோடியாக வைத்திருப்போர் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் மூட்டை மூட்டையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டசம்பவம் நடந்துள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி, சி.பி.கஞ்ச் பகுதியில் நடந்துள்ளது. பர்ஷா கேடா சாலையிலுள்ள ஒரு நிறுவனத்தின் அருகில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மூட்டை மூட்டையாக 500, 1000 ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி அதனை தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த தகவலை பெற்ற காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எரிந்த நோட்டுக்களை கைப்பற்றிய காவல்துறையினர் ரிசர்வ் வக்கிக்கு தகவல் கொடுத்து கைப்பற்றப்பட்ட நோட்டுகளின் நம்பகத்தன்மையை பரிசோதித்து வருகின்றனர். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மூட்டை மூட்டையாக எரிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.