November 10, 2016
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் முடங்கிய காய்கறி சந்தை!
500, மற்றும் 1000 ரூபாய் நோட்கள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பின் காரணமாக, ஆத்தூர் தலைவாசல் தினசரி காய்கறி அங்காடியில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் காய்கறிசந்தைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலில் செயல்படும் தினசரி காய்கறி சந்தையாகும். இந்த காய்கறிசந்தையில் சேலம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சென்னை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தினசரி கொள்முதல் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் 500, 1000, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், இந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள், வங்கி, மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாலும், தலைவாசல் தினசரி காய்கறி சந்தையில் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் ஐந்து லட்சம் டன் காய்கறிகள் தேக்கமடைந்து, ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் முடங்கிய காய்கறி சந்தை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.