November 10, 2016
“50 ரூபா கொடுத்தீனா முன்னாடி போலாம்” முன்னே விட லஞ்சம்! வங்கி ஊழியர்கள் அதற்கு மேல்…
தியேட்டர், ரேசன்கடை என பல இடங்களில் கியூவில் நின்ற அனுபவம் நம்மில் பலருக்கு உள்ளது. அதனால் வங்கியில் கியூவில் நிற்பது பெரிய விஷயம் அல்ல. அதே நேரம் பலரும் காலையில் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால், குறுக்கு வழிகளை தேடுகின்றனர்.
இந்நிலையில் வங்கிகளில் இன்று கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் போதுமான அளவு குவிக்கப்படுவார்கள் என ஏற்கனவே போலீசார் அறிவித்தனர். இதனை தான் அந்த குறுக்குவழி பேர்வழிகளில் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். சென்னையில் சில இடங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வரிசையில் நிற்காமல் முன்னே சென்று பணத்தை மாற்றுதற்கு, உதவி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அந்த போலீசாரை “கவனிக்க” வேண்டுமாம். இதே போல் பல இடங்களில் தங்களின் சுய தேவைக்காவும், தெரிந்தவர்களுக்கு கொடுப்பதற்காகவும் போலீசார் வங்கி ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகைக்கு புதிய நோட்டுக்கள் வேண்டும் என்று ஏற்கனவே கூறிவிட்டனராம். இதனால் அவர்களுக்கு அந்த தொகை எடுத்து வைக்கப்பட்டு விட்டதாம்.
வங்கி ஊழியர்கள் மட்டும் சளைத்தவர்களா? அவர்களும் சில இடங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களை நேராக கவுண்டர்களுக்கு வரச் சொல்லி, வரிசையில் நிற்காமலேயே பணத்தை வாரிக் கொடுத்து வருகின்றனராம்… திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற எம்.ஜி.ஆர். பட பாடல் தான் ஞாபத்திற்கு வருகிறது.
“50 ரூபா கொடுத்தீனா முன்னாடி போலாம்” முன்னே விட லஞ்சம்! வங்கி ஊழியர்கள் அதற்கு மேல்…
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.