தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணியிலிருந்து 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் விளையாட நான்கு புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே காமன்வெல்த் பேங்க் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளன. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 85 ரன்களிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களிலும் ஆல்-அவுட் ஆயினர். அந்த போட்டியையும் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவினர்.
இதனைத் தொடர்ந்து, இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணியில் நான்கு புதுமுக வீரர்களை களமிறக்க உள்ளனர் ஆஸ்திரேலியா. இரண்டாவது டெஸ்டில் விளையாடிய ஜோ பர்ன்ஸ், கேலம் ஃபெர்குசன், பீடர் நெவில் மற்றும் ஜோ மென்னி ஆகிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஆடம் வோஜஸுக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.