November 30, 2016
விழுப்புரத்தில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- 5 பேர் பலி; 39 பேர் படுகாயம்
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் முண்டியம்பாக்கம் என்ற இடத்தில் சர்க்கரை ஆலை உள்ளது. இதைஒட்டி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில், இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில், ஒரு குழந்தை உட்பட, ஐந்து பேர் பலியாகினர். விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி பேருந்துகள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை மையமாக வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 'எங்கேயும் எப்போதும்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இன்று அதே போல ஒரு விபத்து முண்டியம்பாக்கம் அருகே நடந்துள்ளது.
இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். பேருந்துகள் மோதிய வேகத்தில் ஒருபேருந்து தலைகீழாக கவிழ்ந்து நொறுங்கியதில் ஏராளமானோருக்கு எலும்பு முறிந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விழுப்புரத்தில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்- 5 பேர் பலி; 39 பேர் படுகாயம்
Reviewed by மறத்தமிழன்
on
November 30, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.