November 17, 2016
இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!
நான்கு நாட்களுக்கு மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் வரும் 17, 18, 19 மற்றும் வாக்கும் எண்ணும் நாளான 22 ஆகிய 4 தினங்களில் மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.