Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை கணவர், மாமியார் உள்பட 4 பேர் கைது



திருவள்ளூர் அருகே புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமியார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமணம்
 திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் செல்லியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23). இவர் சென்னை பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வருகிறார். வெங்கடேசன் பென்னலூர்பேட்டையை அடுத்த திம்மபூபாலபுரத்தை சேர்ந்த  ருத்ரா(20) என்பவரை கடந்த 26–5–2016 அன்று திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின்போது ருத்ராவின் பெற்றோர் 20 பவுன் தங்க நகை, சீர்வரிசை பொருட்கள், ஒரு  மோட்டார் சைக்கிள் போன்றவற்றை சீதனமாக கொடுத்தனர். இந்த நிலையில் வெங்கடேசனின் தாயார் செல்வி (45),  தந்தை ஏழுமலை ஆகியோர் ருத்ராவிடம் தீபாவளி பண்டிகையையொட்டி உன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்று 2 பவுன் தங்க நகை, ஒரு எல்.இ.டி. டி.வி.யையும் வாங்கி வரும்படி தொல்லை கொடுத்தனர்.
தற்கொலை
 இதைத்தொடர்ந்து ருத்ரா தன்னுடைய பெற்றோரிடம் தீபாவளி பண்டிகையையொட்டி 2 பவுன் தங்கநகை மற்றும் எல்.இ.டி. டி.வி. வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு அவரது பெற்றோர் தற்போது தங்களிடம் பணம் இல்லை என்றும் ஜனவரி மாதம் வாங்கி தருவதாகவும் கூறினார்கள். இதை ருத்ரா, தனது கணவர், மாமனார், மாமியாரிடம் கூறியுள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்து அவர்கள் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவர் வீட்டில் இருந்த ருத்ரா வீட்டில் யாரும் இல்லாதபோது தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீசில் புகார்
 இது குறித்து ருத்ராவின் தந்தை வெங்கடேசன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.  அந்த புகாரில், தன்னுடைய மகள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டதால்தான் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது. அதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்ராவின் கணவர் வெங்கடேசன், மாமியார் செல்வி, மாமனார் ஏழுமலை மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த 16 வயது சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.