Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

உலகில் 48 நாடுகள் அழியப்போகும் ஆபத்து!!… வெளியான அதிர்ச்சி தகவல்!!…



புவி வெப்பமயமாதலால் உலகில் உள்ள 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இதனால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த இந்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால, புவி வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே வருகிறது, இதனால் தான் பனிப்பாறைகள் உருகுகின்றன. இவை தண்ணீராக உருமாறி கடல் நீரில் கலக்கிறது. இதனால் கடலின் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதே நிலை நீடித்தால், உலகின் பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது . தற்போது இதை சமாளிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஐநாவில் தற்போது நடைபெற்று வரும் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டின் போது பூமியின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர சில அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதை, சுமார் 1.5 டிகிரி செல்சியல்ஸ் அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று இந்த 48 நாடுகளும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 2050 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 48 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இலங்கை, நேபால், பூட்டான், எத்தியோப்பியா, வியட்நாம், உள்ளிட்ட 48 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.