Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 15, 2016

ரூ.4000 பணத்தை மாற்ற முடியாத சோகத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்



பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததன் விளைவாக ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினந்தோறும் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள் தங்கள் வேலையையும் மறந்து வங்கி வாசலில் நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே காத்திருந்தாலும் பணம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் தன்னிடம் உள்ள ரூ.4000 ஆயிரத்தை ரூ.100ஆக மாற்ற முடியாத காரணத்தால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்,. இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் ரிஜ்வானா என்றும் இவர் கடந்த இரண்டு நாட்களாக வங்கிக்கு சென்று தன்னுடைய பணத்தை மாற்ற முயன்றதாகவும், ஆனால் வங்கியில் அதிக கூட்டம் இருந்ததால் வெறும் கையுடன் திரும்பி வந்துவிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.