Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 17, 2016

மருத்துமனையில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் 3 வயது குழந்தை பலி!



கோவையில் தனியார் மருத்துவமனையில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து, முறையான சிகிச்சை அளிக்காததால் 3 வயது குழந்தை உயிரிழந்தாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை பெரியகுயிலி பகுதியை சேர்ந்த சிவகுமார்- ரஞ்சிதம் தம்பதியர், தங்களின் மூன்றரை வயது பெண் குழந்தை தீபஸ்ரீயை, உடல்நல குறைவால் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சேர்த்தனர்.

இந்நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தது.  மருத்துவர்களின் அலட்சியப்போக்கு காரணமாகவே குழந்தை உயிரிழந்தாக கூறி பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குழந்தையின் தந்தை சிவகுமார் திடீரென மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு கதவு கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து அலைக்கழித்தால் தான், தங்கள் குழந்தை இறந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்க மறுத்து விட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.