Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 16, 2016

34 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 மாவோயிஸ்ட்களுக்கு தூக்கு தண்டனை: 17 ஆண்டுகளாக நடந்த வழக்கில் பிஹார் நீதிமன்றம் தீர்ப்பு



பிஹாரில் 1999-ல் நிகழ்ந்த செனாரி படுகொலை சம்பவத்தில் தொடர் புடைய 10 மாவோயிஸ்ட்களுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி யுள்ளது.
பிஹார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள செனாரி கிராமத்தில் வசித்து வந்த உயர் ஜாதி மக்கள் 34 பேரை கடந்த 1999-ம் ஆண்டு, மார்ச் 18-ல் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் படுகொலை செய் தனர். இது தொடர்பாக 74 பேர் கைது செய்யப்பட்டு 56 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் 18 பேர் தலைமறைவாகினர்.
கடந்த 17 ஆண்டுகளாக இவ்வழக்கை விசாரித்து வந்த ஜெகனாபாத் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி 15 பேரை குற்றவாளிகளாக அறிவித்து 23 பேரை விடுவித்தது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் குற்ற வாளிகளுக்கான தண்டனையை நீதிபதி ரஞ்சித் குமார் நேற்று அறிவித் தார். அப்போது குற்றம் நிரூபிக்கப் பட்ட 10 மாவோயிஸ்ட்களுக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். எஞ்சிய 2 குற்றவாளிகளுக்கான தண்டனை வரும் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.