Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 30, 2016

கொலம்பியா விமான விபத்து. 3 கால்பந்து வீரர்கள் உள்பட 5 பேர் உயிர் பிழைத்த அதிசயம்



பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர்கள் உள்பட 81 பயணிகளுடன் நேற்று பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு கிளம்பிய விமானம்  கொலம்பியாவின் மெடலின் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் உள்ள 81 பேர்களின் கதி என்ன என்ற பதட்டத்துடன் அனைவரும் இருந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய செய்தி வெளிவந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்தில் ஐந்து பேர் உயிர் பிழைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மூவர் கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் உட்பட 76 பயணிகள் இறந்து விட்டதாகவும் இவர்களில் 25 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.