Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 30, 2016

வேந்தர் மூவீஸ் மதனை மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி! அப்பே வந்துரும்



பணமோசடி தொடர்பான வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனை, மேலும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி 85 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், வேந்தர் மூவிஸ் மதன், கடந்த 21 ஆம் தேதி திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த 23 ஆம் தேதி, நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், மதனை 7 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் மதனுக்கு நெருக்கமான தயாரிப்பாளர் சிவா, பாலகுரு, ஃபைனான்சியர் ராம் மற்றும் ராம் வாசு, எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் 7 நாட்கள் காவல் முடிவடைந்ததால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது மேலும் இரண்டு நாட்கள் மதனை காவலில் எடுக்க விசாரணை நடத்த போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.