Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 27, 2016

மாணவனுடன் உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய்: தலைமறைவாகிய கள்ளக்காதல் ஜோடி!



நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் ஒருவன் 25 வயதான இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவருடன் உல்லாசமாக இருந்து அவருடன் ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.சிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான் அந்த மாணவன். கடந்த திங்கட் கிழமையன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பதட்டமடைந்த மாணவரின் பெற்றோர் நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், பேட்டை, எம்.ஜி.டி நகரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் அவர் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது.

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொருவரிடம் சில ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தும் அவர், அவ்வப்போது கணவரை மாற்றி வந்தார். அவருக்கு 2 குழந்தைகளும் இருக்கிறது.

இந்நிலையில் அந்த பெண், கல்லூரி மாணவரை தன்னுடைய வலையில் சிக்க வைத்துள்ளார். கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து தற்போது அந்த மாணவனை இழுத்துக் கொண்டு அந்த பெண் தலைமறைவாகி விட்டார். அவரின் 2 குழந்தைகளையும் அவருடனேயே அழைத்துச் சென்றுள்ளார். அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களை பிடிக்க போலீசார் போராடி வருகிறார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.