November 14, 2016
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வலுப்பெற்றுள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்க கடலில், தமிழகம், இலங்கை ஒட்டிய பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது இலங்கை, தமிழகத்தை ஒட்டி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும். தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் லேசாக மழை தூறியது. 7 மணிக்கு சிறிது நேரம் மழை பெய்தது. அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணிக்கு இடிமின்னலுடன் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.