Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 1, 2016

புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவனை 2ஆம் திருமணம் செய்த பெண் போலீஸ்



புகார் கொடுக்கவந்த பெண்ணின் கணவனை இரண்டாம் திருமணம் செய்த பெண் போலீஸால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தெற்கு பரணம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி லதா(36) மற்றும் 16 வயது மற்றும் 14 வயதில் இரண்டு மகள்களும் 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
செல்வகுமார் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்தார். செல்வகுமாருக்கு அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் தனது வீட்டிற்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். இதையடுத்து செல்வகுமாரின் மனைவி காவல்நிலையத்திற்கு சென்று அங்கிருந்த பெண் போலீசான ராதிகாவிடம் புகார் அளித்துள்ளார். மேலும் செல்வகுமாரை மிரட்டுவதற்காக லதாவிடம் இருந்து ராதிகா மொபைல் நம்பரை வாங்கியுளார்.
போலீஸ் ராதிகாவிடம் பவ்வியாமாக பேசிய செல்வகுமாருக்கும் , ராதிகாவுக்கும் காதல் மலர்ந்தது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய செல்வகுமார் ராதிகாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து இருவரும் செல்போனில் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
செல்வக்குமாரின் செல்போனைப் பார்த்த லதா, இது குறித்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து போலீசார்,இரண்டாவது திருமணம் செய்ததற்காக செல்வகுமாரை கைதுசெய்தனர்.பெண் போலீஸ் ராதிகாவை தேடி வருகின்றனர்
ராதிகா இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கணவன் மணிமுருகனை விட்டுபிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.