November 24, 2016
25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் சுயசரிதை புத்தகம் இன்று வெளியாகிறது
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் சுயசரிதை புத்தகம் இன்று வெளியாக உள்ளது.
அதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், பிரியங்கா காந்தியை சந்திக்கும் சக்தி தனக்கு துளியளவும் இல்லை என்றும், பிரியங்காவை சந்தித்தவுடன் தான் தேம்பி தேம்பி அழுததாகவும் நளினி குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா அழுததை தன்னால் தாங்க முடியவில்லை எனவும், வெந்தணலில் விழுந்து துடிக்கும் புழுவாக துடித்தேன் என்றும் அந்த புத்தகத்தில் நளினி குறிப்பிட்டுள்ளார்.
உதடுகள் துடித்தபடி "ஏன் அப்படி செய்தீர்கள்" என பிரியங்கா தன்னிடம் கேட்டதாகவும், அப்பா மிக மென்மையானவர், நல்லவர் என கூறி பிரியங்கா கதறியதாகவும் புத்தகத்தில் நளினி தெரிவித்துள்ளார். பிரியங்காவின் அழுது சிவந்த கண்களையும் முகத்தையும் பார்த்து வேதனைப்பட்டதாகவும், "அழாதீர்கள் மேடம்" என்று கூறி பிரியங்கா அழுததை நிறுத்தும்படி வேண்டியதாகவும் நளினி தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.
குற்றவாளி என நம்பினால் இப்போதே உயிரை விடுகிறேன் என்றும், உங்கள் விருப்பம் போல் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், அவரிடம் கூறியதாக நளினி தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜீவ் படுகொலை காட்சியை தொலைக்காட்சியில் கண்டு தனது வீட்டில் அனைவரும் அழுததாகவும், தனது குடும்பத்தாருடன் 2 நாட்கள் சமையல் கூட செய்யாமல் அழுதபடி இருந்ததாகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். நளினியின் சுயசரிதை குறித்த தகவல்கள் வெளியானதை அடுத்து, நளினி - பிரியங்கா சந்திப்பில் கடந்த 8 வருடங்களாக நீடித்த மர்மம் விலகியுள்ளது.
25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் சுயசரிதை புத்தகம் இன்று வெளியாகிறது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.