Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 16, 2016

ரூபாய் நோட்டுகள் அறிவிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!



500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலியால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து அதிர்ச்சியில் ஆங்காங்கே சிலர் உயிரிழந்தனர். அதே போன்று தனியார் மருத்துவமனைகளில் சில்லறை தட்டுப்பாட்டால் மருத்துவம் பார்க்க மறுத்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது.

மேலும் பல இடங்களில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற பலர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இதுவரை கடந்த 6 நாட்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மரணங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரம் வெளியாகியிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருக்க வாய்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.