Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 15, 2016

2017ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை நாட்கள் எவை எவை?



2017ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களே இருக்கும் நிலையில் சற்று முன் தமிழக அரசு 2017ஆம் ஆண்டின் நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அதில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி அரசு விடுமுறையாக 22 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10 விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர்ச்சியான விடுமுறையை கொண்டதாக உள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல். ரம்ஜான், கிருஷ்ண ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் போன்ற விடுமுறை நாட்கள்  திங்கட்கிழமை வருவதால் தமிழக அரசு ஊழியர்களுக்கு, தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதேபோல் தமிழ்ப் புத்தாண்டு, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, மிலாடி நபி போன்ற பண்டிகைகள் வெள்ளிக்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தொடர் விடுமுறை  அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் குடியரசு தினம், யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி ஆகிய விடுமுறை நாட்கள் செவ்வாய், புதன், வியாழன் போன்ற வார நாட்களில் வருவதால், கூடுதல் விடுமுறை கிடைக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.