November 13, 2016
ரூ.2000 கலர் ஜெராக்ஸ் கொடுத்து சரக்கு வாங்கி ஏமாற்றிய குடிமகன்!
புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து சரக்கு வாங்கி மீதி பணத்தையும் சாமார்த்தியமாக வாங்கி டாஸ்மாக் ஊழியரை ஏமாற்றியுள்ளார் ஒரு குடிமகன்.
வந்தவாசி: மூன்று நாட்களாகவே புழக்கத்தில் உள்ள புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து டாஸ்மாக்கில் 2 குவாட்டர் வாங்கிவிட்டு மீதி பணத்தையும் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் குடிமகன் ஒருவர். இதனால் டாஸ்மாக் ஊழியரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இந்தியன் வங்கி கிளையில்,மருதாடு டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஒருவர் நேற்று காலை வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை செலுத்தினார். பணத்தை வாங்கிய வங்கி அலுவலர் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை ஆய்வு செய்துள்ளார். அப்போது, சந்தேகப்படும்படியாக இருந்த புதிய 2000 ரூபாய் நோட்டை தனியாக எடுத்து ஆய்வு செய்துள்ளார். அப்போது, அது வெறும் கலர் ஜெராக்ஸ் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வங்கி ஊழியர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இரவு 9.30 மணியளவில் டாஸ்மாக் கடைக்கு ஒருவர் ஓடி வந்ததாகவும், பஸ் வரப்போகிறது, சீக்கிரமாக 2 குவாட்டர் கொடுங்க என்று 2000 ரூபாய் நோட்டை நீட்டியதாகவும், இதனை உண்மை என்று நம்பி, 2000 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு சரக்கையும் கொடுத்து மீதி 1,800 ரூபாய் பணத்தையும் கொடுத்தாகவும் டாஸ்மாக் ஊழியர் போலீசாரிடம் தெரிவித்தார்.
2000 ரூபாய் நோட்டு அறிமுகமாகி ஒரு சில நாட்கள்தான் ஆகி உள்ளதால் எது ஒரிஜினல் எது ஜெராக்ஸ் என்பது தெரியாமல் டாஸ்மாக் ஊழியர் ஏமாந்தது விசாரணையில் தெரியவந்தது.
ரூ.2000 கலர் ஜெராக்ஸ் கொடுத்து சரக்கு வாங்கி ஏமாற்றிய குடிமகன்!
Reviewed by மறத்தமிழன்
on
November 13, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
November 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.