November 1, 2016
கால்வாய் அடைப்பால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் நீரில் மூழ்கி பலி
தேனி மாவட்டத்தில் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் அடைப்பு காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் நீரில் மூழ்கி பலியாகின.
தேனி மாவட்டம் அல்லிநகரம் சின்னகண்மாய் குளம் அருகே 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி சாக்கடை கழிவு நீர் அனைத்தும் சின்னகண்மாயில் விடப்பட்டு வந்த நிலையில், கண்மாயில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பெரிய கண்மாய் வழியாக விடப்பட்டது.
தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று பெய்த கனமழையால் நீர் வெளியேற முடியாமல் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வீட்டின் தொழுவத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட ஆடுகள் நீரில் மூழ்கி பலியானது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்வாய் அடைப்பால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் நீரில் மூழ்கி பலி
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.