ஒரு ஏழைக்கு 15 லட்சம் ரூபாய் என்று மோடி அறிவிக்கவில்லையா? சொந்த கருத்து தமிழிசை அக்காவிற்கு ஆதாரம் இதோ!
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர தாமோதர தாஸ் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் ஜக்தால்பூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் (7.11.2013) என்ன பேசினார்?
“தீனதயாள் உபாத்தியா, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் தேசத்தை சீர்திருத்த பிறந்தவர்கள். இவர்கள் விவசாயக் குடும் பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் அல்ல; இவர் களுக்கு என்று அலகாபாத் போன்ற நகரங் களில் ஆடம்பர அரண்மனை போன்ற மாளிகை இல்லை.
நாட்டின் 80 விழுக்காடு மக்கள் விவசாயி கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரிபவர்கள். பஞ்சாப், அரியானா, உ.பி., பீகார் போன்ற மாநிலங்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளன. ஆனால், இந்த விவசாயிகளின் உழைப்பை நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு வீணாக்கி விட்டது. இங்கு என்ன வளம் இல்லை; நமது வளங்களை எல்லாம் காங்கிரசார் இத்தனை ஆண்டுகளாக கொள் ளையடித்து குபேரனாகி விட்டார்கள்.
இவர்கள் கொள்ளையடித்த பணத்தை எல்லாம், கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள். இவர்கள் கொள் ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்புப் பணத்தின் மதிப்பு மிகவும் அதிகம். நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் இந்த கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன். அப்படி மீட்ட பணத்தை இந்த நாட்டின் ஒவ்வொரு ஏழையின் வங்கி கணக் கிலும் ரூ.15 லட்சம் போடுவேன்; வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தின் அளவு அதிகமாக உள்ளது.
இந்தக் கருப்புப் பணத்தை மீட்டாலே இந்தியாவை தங்கக் கிளியாக மாற்றி விடலாம். அதன் பிறகு இந்தியா உலகின் பொருளாதார வல்லரசாக மாறிவிடும்.
காங்கிரசாரின் ஊழல்பட்டியல் மிகவும் நீளமாக உள்ளது. 2-ஜியிலிருந்து, ஆதர்ஸ் ஊழல், போபர்ஸ் பீரங்கி ஊழல், பங்கு வர்த்தக ஊழல், மாட்டுத் தீவனத்தில் ஊழல், ஸ்டாம்ப் பேப்பரில்கூட ஊழல் புரிந்துள் ளனர். இப்படி ஊழல் புரிந்து கொள்ளை யடித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய மக்கள் தொகையைவிட லட்சம் மடங்கு அதிகம். இதையெல்லாம் மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றால், நீங்கள் எனக்கு வாக்களியுங்கள். எனக்கு என்று மகன், மகள், மருமகன் இல்லை.
வெளிநாட்டுக்குச் சென்று சொத்துகளை பதுக்கவேண்டிய அவசியமில்லை, நான் உங்கள் உடன் பிறந்தவன், உங்களுடனே இருப்பவன்.’’
இது யூ-டூயூப்பிலும் ஒலிக்கிறது.
இவ்வளவு வெளிப்படையாக மோடி பேசிய பேச்சு ஒலிக்கும் போது ‘அய்யயோ - சத்தியமாக சொல்லுகிறோம்; (கிராமங்களில் துணியைப் போட்டுத் தாண்டுவது என்று சொல்வார்கள் அல்லவா - அந்த முறையில்) மோடி அப்படி சொல்லவே யில்லை என்று பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களும், சங் பரிவாரைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் தொண்டைக் கிழிய கூச்சலிட்டுக் கத்துகிறார்கள்.
சொன்னதைச் சொன்னேன் என்று ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் இல்லாதவர்கள் இவர்கள் என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?
இன்னொரு வலுவான ஆதாரம் இருக்கிறது - கிடுக்கிப் பிடி போன்றது அது - தப்பவே முடியாது. சாட்சிக்கு இங்கு வருபவர் நரேந்திர மோடியின் ‘‘மாப்பிள்ளைத் தோழர்’’ என்று சொல்லத்தக்கவரும், அகில இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவருமான திருவாளர் அமித்ஷா.
இதோ, அவர் பேசுகிறார் கேளுங்கள்! கேளுங்கள்!!
‘‘கருப்புப் பணம் தொடர்பாக மோடி கூறியவை அனைத்தும் தேர்தல் தந்திரம் மட்டுமே என பாஜக தலை வர் அமித் ஷா கூறியிருப்பது மத்திய அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் கூறிய அமித் ஷா, மோடி பிரச்சாரத்தின்போது கூறியது தேர்தல் தந்திரம் மட்டுமே என்றும், கருப்புப் பணத்தை மீட்டு வருவோம் என்பதை அவருக்கு உரிய பாணியில் மோடி குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
கருப்புப் பணத்தை மீட்டு திட்டங்களில் முதலீடு செய்து, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மோடி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அதேநேரம் தங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்பதை மக்களே நம்பியிருக்க மாட்டார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்தார். தேர்தல் தந்திரத்திற்கும், வாக்குறுதிக்கும் வித்தியாசம் உள்ளது என்றார் அவர்.
பணம் கிடைக்காது என்று மக்களுக்கே தெரிந்திருக்கும் போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது புரியவில்லை என்றால் அவர் மீது பரிதாபப்படத்தான் முடியும் என்றும் அமித் ஷா கூறினார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கருப்புப் பண விவகாரத்தில் பொய் யான வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலி யுறுத்தியுள்ளது. பாஜக-வின் அரசியல் சந்தர்ப்பவாதத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.’’
(‘எக்னாமிக் டைம்ஸ்’, 6.2.2015)
(ஆங்கிலத்தில் வெளிவந்த செய்தியும் முதல் பக்கத்தில் தரப்பட்டுள்ளது).
அமித்ஷா இப்படிப் பேசியதன் பொருள் என்ன? வெளி நாட்டில் பதுங்கியிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று மோடி சொன்னது உண்மைதான்; அதனை ‘சீரியசாக’ எடுத்துக் கொள்ளவேண் டாம். அது தேர்தலுக்காக சொல்லப்பட்ட பொய் வாக்குறுதி என்பதை ஒப்புக்கொண்டு விட்டாரா இல்லையா?
இதற்கு மேலும் பி.ஜே.பி.காரர்களோ, சங் பரிவார் வட் டாரமோ மோடி இப்படி சொல்லவேயில்லை என்று சொன்னால், இதை முகத்துக்கு நேரே எடுத்துக்காட்டி கரி பூச வேண்டாமா?
இன்னொரு தகவலும் உண்டு.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாநிலத்தைச் சேர்ந்த லால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். (ஆகஸ்ட் 31, 2016).
அதில், 2014 தேர்தல் பரப்புரையில் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் கருப்புப் பணம் மீட்கப்பட்டு அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என வாக்குறுதி அளித்தார். அது எப்பொழுது நிகழும்? மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அவர்கள், ஊழல் நாட்டிலிருந்து சுத்தமாக விரட்டியடிக்கப்படும் என்று கூறினார். ஆனால், தற்போது ஊழல் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மோடி குறிப்பிட்டது எப்பொழுது நடக்கும்? என்ற கேள்விகள் உள்பட பல்வேறு கேள்விகளை திரு.லால் அவர்கள் கேட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த இந்திய தகவல் ஆணையம் 15 நாளில் மனுதாரரின் கேள்விக்குப் பதில் அளிக்குமாறு பிரதமர் மோடி அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்ணப்பம்; 15 நாள்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று இந்திய தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளது. எத்தனை 15 நாள்கள் ஓடியிருக்கின்றன? ஆனால், பதில்தான் இல்லை. என்ன பதில் சொல்ல முடியும்? ஒன்று உண்மையை ஒப்புக் கொள்ளவேண்டும். அதைத் தவிர்க்கவே இப்படி ஆறப் போடப் பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் என்னும் வேலி பயிரை மேய்கிறதே!!



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.