Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 8, 2016

கண் நோய்கள் வராமல் தடுக்க நவ.14-ம் தேதி வரை சொட்டு மருந்து வினியோகம்



தமிழகத்தில் பார்வை குறைபாடு, மாலைக்கண் போன்ற நோய்களைத் தடுக்க தமிழக அரசு சார்பில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு விட்டமின் ஏ சொட்டு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வரும் 14-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாதம் முதல் 5 வயதுள்ள குழந்தைகள் அனைவருக்கும் விட்டமின்-ஏ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் சுவாமிநாதன், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விட்டமின் ஏ சொட்டு மருந்து வரும் 14-ம் தேதி வரை வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
இதன்மூலம் பார்வை குறைபாடு, மாலை கண் போன்ற நோய்கள் வராமல் தடுக்க, இந்த சொட்டு மருந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.