November 30, 2016
பெங்களூருவில் ரூ.1.37 கோடி பணத்துடன் மாயமான ஏடிஎம் வேன் ஓட்டுநர் கைது
பெங்களூருவில் உள்ள லிங்கராஜாபுரத்தைச் சேர்ந்தவர் டோமினிக் செல்வராஜ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ஓட்டு நராக பணியாற்றுகிறார். கடந்த 23-ம் தேதி பெங்களூருவில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்ப சென்றார். கே.ஜி.சாலையில் இருந்த வங்கியில் அதன் ஊழியர்களும், பாது காவலர்களும் உள்ளே சென்ற போது டோமினிக் செல்வராஜ் வேனில் இருந்த ரூ.1.37 கோடி பணத்துடன் மாயமானார்.
இதுகுறித்து உப்பார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்தனர். இதனிடையே கடந்த 24-ம் தேதி காலை காணாமல் போன ஏடிஎம் வேன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த ரூ.45 லட்சம் மற்றும் 2 துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக இருந்த டோமினிக் மற்றும் அவரது மனைவியைப் பிடிக்க சென்னை, வேலூர், சேலம் ஆகிய இடங்களுக்கு தனிப்படைப் போலீஸார் விரைந்தனர்.
இது தொடர்பாக பெங்களூரு மாநகர உதவி காவல் ஆணையர் அனுசேத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூருவில் ரூ.1.37 கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த டோமினிக் செல்வராஜ் மவுண்ட் கார்மல் கல்லூரி அருகே வேனை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மனைவி எல்வின் மேரி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அன்றிரவு கிருஷ்ணகிரியில் தங்கிவிட்டு பேருந்து மூலமாக வேலூருக்கு சென்றுள்ளனர்.
தனிப்படைப் போலீஸார் சென்னை சென்றிருப்பதை அறிந்த டோமினிக் செல்வராஜ், வேலூரில் இருந்து கோவைக்குச் சென்றுள்ளார். கோவையில் இருந்து கேரள மாநிலம் திரிசூர் அருகேயுள்ள சாலக்குடி தேவாலயத்துக்கு சென்றுள்ளனர். அங்கு இரு நாட்கள் தங்கி பிரார்த்தனை செய்துள்ளனர். அப்போது மனமுடைந்த டோமினிக் செல்வராஜ், “நான் மிகப்பெரிய பாவத்தைச் செய்து விட்டேன். கடன் பிரச்சினையால் தவித்த நிலையில் கட்டுக்கட்டாக பணத்தைப் பார்த்தவுடன் சபலப்பட்டு திருடிவிட்டேன். என்னை மன்னித்து விடு கடவுளே” என பாவமன்னிப்பு கோரியுள்ளார்.
இதனால் மனம் மாறிய எல்வின் மேரி, ''பெங்களூருக்கு சென்று போலீஸில் சரண் அடைந்து, பணத்தை ஒப்படைத்து விடலாம். இல்லாவிடில் நம்முடைய குழந்தைக்கும் உறவினர்களுக்கும் தான் சிக்கல்'' என கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்த தம்பதியினர் வழக்கறிஞருடன் சரணடைய முடிவெடுத்தனர். வழக்கறிஞர் கிடைக்காததால் டோமினிக் செல்வராஜின் மனைவி எல்வின் மேரி முதலில் சரணடைந்தார்.
இதையடுத்து டோமினிக் செல்வராஜின் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். வங்கியில் இருந்து திருடப்பட்ட ரூ.1.37 கோடி பணத்தில், இதுவரை ரூ.1.25 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.12.2 லட்சத்தை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்
பெங்களூருவில் ரூ.1.37 கோடி பணத்துடன் மாயமான ஏடிஎம் வேன் ஓட்டுநர் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.