November 24, 2016
ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப ரூ.1.37 கோடியுடன் சென்ற வேன் திடீர் மாயம்
ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு காரணமாக ஏ.டி.எம்-இல் பணம் நிரப்பும் பணியை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கே.ஜி சாலையில் அமைந்துள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் நிரப்ப சென்ற வேன் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வேனில் ரூ.1 கோடியே 37 லட்சம் பணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வேன் டிரைவர் பணத்துடன் தப்பினாரா? அல்லது டிரைவருடன் வேனை யாராவது கடத்திவிட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
டிரைவரின் மொபைல் எண் சுவிட்ச் ஆகியுள்ளதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய சிம்-இன் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து போலீஸார் டிராக் செய்ய முயன்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
ஏ.டி.எம்-இல் பணம் நிரப்ப ரூ.1.37 கோடியுடன் சென்ற வேன் திடீர் மாயம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.