November 5, 2016
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.ரூ.10,500 கோடி அபராதம். அதிர்ச்சி தகவல்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.10,500 கோடி அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயு உற்பத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனமும் இந்த பணிகளில் பங்குதாரராக இணைந்து, ரிலையன்ஸ் உடன் செயல்பட்டு வருகிறது.
எனினும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு லாபம் கிடைக்கவில்லை என்றும், ரிலையன்ஸ் நிர்வாகம் வர்த்தகச் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டு, ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது என்றும் புகார் எழுந்தது. இதன்பேரில், கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மேற்கொண்ட இயற்கை எரிவாயு உற்பத்திப் பணிகளில் தேவையற்ற இழப்பீடு ஏற்படுத்தியதற்காக, அந்நிறுவனத்திற்கு ரூ.10,500 கோடி வரை அபராதம் விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அபராதம் அதிர்ச்சி அளிக்கும் செயல் எனவும், சட்டத்திற்கு விரோதமாக தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.ரூ.10,500 கோடி அபராதம். அதிர்ச்சி தகவல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.