November 25, 2016
சேலம் அருகே 100 மற்றும் 50 ரூபாய் கள்ளநோட்டுகள்!
சில்லறை தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சேலம் அருகே 100 மற்றும் 50 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமரின் அறிவிப்பால் கடந்த 16 நாட்களாக பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர், மேலும் வங்கிகள் மற்றும் ஏ,டி,எம், இயந்திரங்களில் கிடைக்கக்கூடிய இரண்டயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமலும், சில்லரை தொகை கிடைக்காமலும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது கள்ள நோட்டு கும்பல்கள் 100 மற்றும் 50 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 500 ,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் 100 ரூபாய் நோட்டு கையில் கிடைத்தால் போதும் என்ற நிலையில் பல்வேறு இடங்களில் கிடைக்கின்ற 100 ரூபாய் நோட்டுக்களை வாங்கி செல்கின்றனர். அப்படி வாங்கி செல்லும் நோட்டுக்களில் கள்ள நோட்டுகளும் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் மளிகை கடைகள், சில்லரை வியாபார கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது தான் அவை கள்ள நோட்டுக்கள் என்பது தெரிய வருவதாக கூறுகிறார்கள்.
சேலம் அருகே 100 மற்றும் 50 ரூபாய் கள்ளநோட்டுகள்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.