டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த மிஸ்திரி, அக்டோபர் 24-ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் டிசிஎஸ் நிறுவனத்துக்கும் தலைவராக இருந்து வந்தார். மிஸ்திரி நீக்கத்திற்குப் பிறகு டாடா குழுமத்தின் இடைக்கால தலைவராக மீண்டும் ரத்தன் டாடாவே பொறுப்பேற்றார். புதிய தலைவரை இயக்குநர்கள் குழு தேடி வரும் நிலையில், மிஸ்திரி வகித்து வந்த டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு இஷாத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா குழுமத்துக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் நிறுவனம் டி.சி.எஸ்தான். இதனால் அதன் நிர்வாகப் பொறுப்புகளைத் திறம்பட கொண்டு செல்ல, அதற்கு திறமையான தலைவர் அவசியம் தேவை. இந்த நிலையில் டி.சி.எஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இஷாத் உசைன் பற்றி 10 தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
1. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டில் பிறந்த இவர், டெல்லியில் உள்ள தி டூன் ஸ்கூல் என்ற பள்ளியில் படித்தார். பின்னர் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டப் படிப்பு படித்தார்.
2. பின்னர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் சார்ட்டர்ட் அக்கவுன்டன்டாக இருந்துள்ளார். மேலும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட் புரோகிராமில் கலந்து கொண்டுள்ளார்.
3. 1983-ல் இந்தியன் ட்யூப் என்ற நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதில் இருந்து, இவர் டாடா குழுமத்தில் பணிபுரிகிறார்.
4. டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழுவின் நிர்வாக இயக்குநராக ஜூலை 1, 1999-ல் நியமிக்கப்பட்டார்.
5. 2000-ல் டாடா சன்ஸ் லிமிடெட்டின் நிதி இயக்குநராக ஆனார்.
6. டாடா சன்ஸ் குழுவில் இணைவதற்கு முன் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கிறார்.
7. டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்த அதே நேரம், வோல்டாஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்கை நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
8. மேலும் டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களான டாடா ஸ்டீல், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா டெலி சர்வீசஸ், டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் இயக்குநர் குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
9. நவம்பர் 2006ல் உசைன், மும்பைப் பங்குச் சந்தையின் பொது ஆர்வலர் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
10. 2008 ஜனவரியில் இந்திய கலைகளுக்கான ஃபவுண்டேஷனின் ட்ரஸ்ட்டிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
டாடா குழும செயல்பாடுகள் மற்றும் தொழிலில் இவருக்கு 33 வருடங்கள் அனுபவம் உள்ளது. 69 வயதான இஷாத் உசைன், டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், சிறப்பாக செயல்படுவார் என்று டாடா குழும இயக்குநர்கள் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.