அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் ஏடிஎம் வாசலிலும், வங்கியிலும் கியூவில் நிற்க, பண பரிமாற்றம் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை உண்டியலில் சென்று போட்டவர்களும் இருக்கிறார்கள். இப்போது பணம் பரிமாற்றம் குறைந்த நிலையிலும், வங்கியிலும், ஏடிஎம்-யிலும் இரண்டாயிரம் ரூபாய் தாளை தருவதால் மக்கள் அடுத்து சில்லறைக்கு அல்லாலோகப்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
சில்லறைக் காசுகளின் தட்டுப்பாட்டினை போக்கும் விதமாக மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்படும் கோயில் உண்டியல்கள் இப்போது மூன்று நாளைக்கு ஒரு முறை திறக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. உண்டியலில் சேர்ந்துள்ள பணத்தை உடனுக்குடன் வங்கியில் டெபாசிட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கியில் ஏற்பட்டுள்ள சில்லறை தட்டுப்பாட்டை போக்க முடியும் என்கிறார்கள்.
வழக்கமாக பழனியில் உண்டியல் இருபது நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்படுவது வழக்கம். இவ்வாறு திறக்கும் போது காணிக்கையாய் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக இருப்பது உண்டு. இப்போது இந்த தொகை அதிகரித்து இருக்கிறது என்கிறார்கள். திருப்பதி திருமலையிலும் உண்டியல் காணிக்கை அதிகரித்து இருக்கிறது. திருப்பதி திருமலையில் உண்டியலில் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் மேல் பணம் சேர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 900 கோடி ரூபாய் வரும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
கோயில் உண்டியலில் பணம் போட இருப்பவர்கள் தங்களுடைய பணத்தை டெபிட் கார்டு, கிரேடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்துவதற்கான வசதியினை ஏற்பாடு செய்து வருகிறது எஸ்பிஐ வங்கி. இதற்கான டெபாசிட் மெஷினை நிறுவும் பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த மெஷின் மூலம் கார்டு மூலமும் பணம் செலுத்தலாம். பண நோட்டுகளையும் காணிக்கை செலுத்தும் வசதியும் இருக்கிறது.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்துவதற்கான டெபாசிட் மெஷின்களை முதல்கட்டமாக ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலும், பழனி முருகன் கோயிலும் நிறுவி வருகின்றன. இங்கு இந்த சேவை மக்களின் ஆதரவு பெறும் பட்சத்தில் எஸ்பிஐ வங்கி இதர கோயில்களிலும் இந்த சேவையினை விரிவுப்படுத்தப்படும் என்று சொல்கிறது. இப்படி இ உண்டியல் வரும் போது இனி உண்டியல் திருட்டு என்ற செய்தி குறைய வாய்ப்பு இருக்கிறது.

டெபிட் கார்டு கிரெடிட் கார்டு மூலம் செலுத்தப்படும் தொகையினை வைத்து வருமான வரி துறையினர் நோட்டீஸ் விடாமல் இருந்தால் சரி தான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.