Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 19, 2016

2000 ரூபாயை ஸ்கேன் செய்தால் மோடி பேசுகிறாரா? உண்மை என்ன?


நவம்பர் 8-ம் தேதி தொலைக்காட்சி நேரலையில் தோன்றிய நரேந்திர மோடி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்கள் செல்லாது, அதற்கு பதிலாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என அறிவித்தார். அதன் படியே தற்போது 2000 ரூபாய் தாள்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. அந்த 2000 ரூபாய் தாளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மங்கல்யான் செயற்கைகோளின் படமும் இடம்பெற்றது. யூடியூப்களில் மங்கல்யான் படத்தை ஸ்கேன் செய்தால் மோடி பேசுகிறார் என்ற தகவல்  வீடியோவாக வெளியாகி மக்களிடையே பரவி வருகிறது.

இதற்காக பிரத்யோகமாக 'modi key note' என்ற ஆப் வெளியாகி உள்ளது. இந்த ஆப்பினால் 2000 ரூபாய் நோட்டில் உள்ள மங்கல்யானின் படத்தை ஸ்கேன் செய்தால் மோடி பேசுவது போன்ற வீடியோ ஓட ஆரம்பிக்கிறது. இந்த கீ நோட் ஆப், ரூபாய் நோட்டு மற்றும் கம்ப்யூட்டரின் திரையில் ரூபாயின் படங்களில் உள்ள மங்கல்யானை ஸ்கேன் செய்யும்போது வீடியோ தோன்றும். இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்யும்போது "Disclaimer- For entertaiment purpose only' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டுள்ள 'Barra Skull Studios' நிறுவனம், விளையாட்டு சம்பந்தமான ஆப்களை வடிவமைப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 'மோடி கீ நோட்' ஆப் கள்ள நோட்டு, நல்ல நோட்டு என எதையும் கண்டுபிடிப்பதில்லை. இந்த ஆப்பினை கொண்டு ரூபாய் நோட்டில் இருப்பதுபோல எந்த மங்கல்யான் படத்தின் மீது ஸ்கேன் செய்தாலும் மோடி பேசும் வீடியோ ஓட ஆரம்பிக்கும். இந்த ஆப் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஸ்கேன் செய்தால் இந்த வீடியோ ஓட வேண்டும் என்று ப்ரோகிராமிங் செய்யப்பட்டுள்ள இந்த ஆப் தான் தேவையற்ற வதந்திக்கு காரணமாகியுள்ளது.

பாஸ் இதெல்லாம் பழைய டெக்னிக் வதந்தி ஸ்கூல் குழந்தைங்களே இதெல்லாம் கண்டுபுடிச்சுடும். ஒரு வதந்திய பரப்புபவரவங்க‌ அது பத்தி முழுமையா ஆராயாமல் கைல கிடைச்ச வீடியோவ ஷேர் செய்யாதீங்க.


இதற்கான வீடியோ கிழே:


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.