சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது. கண்ணகி நகரில் மூன்று பேர், தி.நகரில் தனியாக இருந்த மூதாட்டி, வியாசர்பாடியில் ரவுடி பழனி ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். அடுத்து சட்டம், ஒழுங்கும் சீர்குலைந்து காணப்படுகிறது. தொடர் கொள்ளை, கொலை ஆகிய சம்பவங்களால் சென்னை மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் பட்டப்பகலில் பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் போலீஸில் பிடித்துக் கொடுத்தும் அவனை போலீஸார் வெளியில்விட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பள்ளிக்கரணை பெல்நகர், 2-வது மெயின் ரோட்டில் பிளாட் நம்பர் 119ல் பழனியப்பா சாம்ராட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு 2 மாடிகளைக் கொண்டது. இங்கு 6 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தீபாவளியையொட்டி 2 குடும்பங்களைத் தவிர மற்றவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். நேற்று மதியம் 2.30 மணியளவில், அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி இருந்த பைக்கை வாலிபர் ஒருவர் திருட முயற்சித்தார். அப்போது அதை மாடியிலிருந்து பார்த்த ஒரு பெண், திருடன், திருடன் என்று சத்தமிட்டார். உடனடியாக அந்த வாலிபர் பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றார். அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். இதனால் வெளியில் சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய திருடன், அடுக்குமாடியில் உள்ள லிப்ட்டிக்குள் புகுந்தான். லிப்ட்டில் ஏறிய திருடன், அங்கிருந்து 2-வது தளத்துக்குச் சென்றான்.
இதைப்பார்த்தும் அந்த குடியிருப்பைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் லிப்ட்டை சுற்றி வளைத்தனர். இதற்கிடையில் லிப்ட்டின் மின்சாரத்தை மக்கள் கட் செய்தனர். இதனால் நடுவழியில் லிப்ட் நின்றது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்தனர். உடனடியாக போலீஸ் பீட் ஆபிசர் சுரேஷ் என்பவர் அங்கு வந்தார். இதன்பிறகு லிப்ட்டை ஆன் செய்தவுடன் தரை தளத்துக்கு அது வந்தது. லிப்ட் திறந்ததும், உள்ளே இருந்த திருடன் தப்பிச் செல்ல முயன்றான். ஆனால் போலீஸாரும், மக்களும் சேர்ந்து அவனை மடக்கிப் பிடித்தனர். இதன்பிறகு அந்த திருடனை பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இரவு 8 மணியளவில் அந்த திருடனை போலீஸார் வெளியே விட்டனர். இது பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்த திருடன், வேஷ்டி, சட்டை மற்றும் துண்டை கழற்றி விட்டு துணி காயப்போட்ட இடத்திலிருந்து பேண்ட் சட்டையை எடுத்து கொண்டு கீழ்தளத்தில் உள்ள பாத்ரூமுக்கு சென்று மாற்றியுள்ளான். இதன்பிறகு பைக்கை திருட முயற்சித்துள்ளான். நாங்கள் அதைப்பார்த்ததும் வெளியே தப்பிச் செல்ல முடியவில்லை. லிப்ட்க்குள் ஒளிந்திருந்தபோது பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். லிப்ட்டையும் சேதப்படுத்தி விட்டான். ஏற்கெனவே இந்த அப்பார்ட்மென்டில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஒரு பைக்கில் டயர் திருடப்பட்டது. இதுகுறித்து பள்ளிகரணை போலீஸில் அப்போது புகார் கொடுத்த போது, டயர்தான் திருட்டு போய் உள்ளது. பைக் திருட்டு போகவில்லையே என்று போலீஸார் அலட்சியமாக தெரிவித்தனர். இப்போது திருட முயற்சித்த வாலிபரை பிடித்துக் கொடுத்தும் அவனை எங்கள் கண் முன்னாலேயே வெளியே விட்டுள்ளனர்" என்றனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் கூறுகையில், "அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவனுக்கு மனநிலை சரியில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவனை விட்டுவிட்டோம்" என்றார்.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "திருட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த வாலிபர் வந்திருந்தால் எதற்காக அவர் அணிந்திருந்த உடைகளை மாற்ற வேண்டும். விசாரணையின்போது அவரது நடவடிக்கைகள் மூலம் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த பேண்ட், சட்டையை கழற்றி விட்டு அவரது வேஷ்டி, சட்டை, துண்டைக் கொடுத்து அனுப்பி விட்டோம். திருட்டு எதுவும் நடக்காததால் புகார் வாங்கவில்லை" என்றனர்.
அப்பார்ட்மென்டுக்குள் நுழைந்த நபர், கொண்டு வந்த துண்டு, அ.தி.மு.க கட்சியின் டவல். இதனால் அவர், அ.தி.மு.க.வை சேர்ந்தவராக கூட இருக்கலாம். திருட வந்த நபரை போலீஸார் தப்பிக்க அவருக்கு மனநலம் பாதிப்பு என்று சொல்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் அவரை சிகிச்சைக்காக ஏன் அனுப்பவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.