தமிழகத்தில் எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பாளர்களுக்கும் கட்சிகளுக்கும் நிகராகப் பரபரப்பாவது அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தான். எந்தெந்த தொகுதியில் தேர்தல்பணிகளுக்காக அமர்த்தப்படுவார்களோ என்கிற கவலைதான் அந்த பரபரப்புக்குக் காரணம். சில வாரங்களுக்கு முன்பே தரப்படும் தேர்தலுக்கான பயிற்சி தொடங்கி ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே யாரிடம் சென்று பணிகளுக்கான ஆணையை பெற்றுக்கொள்வது எப்படிச் செல்வது என பலதரப்பட்ட சிக்கல்களுடன் தான் ஒவ்வொரு தேர்தல் காலப் பணிகளையும் இவர்கள் சந்திக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக மனு கொடுத்தும் அதன் மீதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள். இந்நிலையில் வரும் அக்டொபர் 16ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அக்டொபர் 7ல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நிலைப்பாடு என்ன? ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர், ஆசிரியர் மணிமேகலை கூறுகையில்,
"தேர்தல் பணி எங்களுக்கு பிரச்னை இல்லை!"
இது தொடர்பாக "தேர்தல் பணியைச் செய்வது எங்கள் கடமை, தேர்தல் பணியாற்றுவதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பணிகளுக்காக ஆசிரியர்களை ஒவ்வொரு ஒன்றியத்தில் நியமிப்பதிலிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. உதாரணமாக திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு அதன் மற்றொரு எல்லையில் இருக்கும் வாசுதேவ நல்லுருக்கோ அல்லது அடுத்த மாவட்டத்திலோ, தேர்தல் பணி என ஆணை பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 12 மணிக்கு அலுவலகம் சென்று ஆணையைப் பெற்றுக்கொண்டு இரண்டு மணிக்குள் அங்கே இருக்கவேண்டும் எனப்படுகிறது. ஆசிரியர்களாக இருக்கும் நிலையில் முதியவர்களாகவோ அல்லது கர்ப்பிணிகளாகவோ இருந்தால் அவர்கள் விரைந்து செல்வதில் அவ்வளவு சிக்கல் இருக்கிறது. சிலருக்கு ஊர் பேர் தெரியாத இடத்திற்க்கெல்லாம் பணி ஆணையைத் தருகின்றனர். தேர்தல் நடக்க இருக்கும் பள்ளி சிறியதாக இருந்தால் அங்கே கழிப்பறை தங்குமிடம் போன்ற அடிப்படை வசதி முக்கால்வாசி இடங்களில் இருப்பதில்லை. பெரிய பள்ளிகளாக இருக்கும் நிலையில் அந்த சிக்கல்கள் பெரும்பாலான சமயம் இருப்பதில்லை. ஊர் தலையாரியும் இது பற்றி எவ்வித அக்கறையும் எடுத்துக்கொள்வதில்லை. சில நேரங்களில் வெறும் நீர் மட்டும் குடித்துக்கொண்டு சாப்பாடு கூட கிடைக்காத நிலையில் மாலை ஆறு மணிவரை தேர்தல் பணிகளை பார்க்க வேண்டிய நிலை வரும். அரசு தரப்பிலிருந்து பார்வையிட வரும் அதிகாரிகளும் தேர்தல் பணிகள் நன்றாக நடக்கிறதா இல்லையா என்பதைதான் கவனிக்கிறார்களே தவிர அதிகாரிகளுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்பதை கவனிப்பதில்லை. சில நேரங்களில் நிறைமாத கர்ப்பிணிகளுக்கு தேர்தல் பணி நியமன ஆணை வந்தால் அதனை மாற்றிக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையத்திடம் வருடாந்திர இது தொடர்பாக மனு அளிக்கிறோம் ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்றார்.
அரசு தரப்பு பதில் என்ன?
இது தொடர்பாக மனுக்கள் அரசுத்தரப்பின் நேரடிப் பார்வைக்கு சென்றுள்ளதா என மாநகராட்சி கல்வி அலுவலரிடம் விசாரித்ததில் தங்களுக்கு அப்படி எதுவும் இதுவரை கம்ப்ளெயிண்ட் வந்ததில்லை என மறுத்தார்.
ஆசிரியர் கூட்டணி அமைப்பினர் முன்வைத்திருக்கும் பிரச்னைக்கு பதிலளித்துப் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன்
"மாவட்ட அளவிலான ஒன்றியங்களில் மட்டுமே பணியமர்த்தப் படுவதால், தொலைவை கருத்தில் கொள்ளாது, பணியை நிறைவேற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
கேள்விகளுக்கு மேலும் பதிலளித்துப் பேசிய அவர்," கர்ப்பிணிகள், புற்றுநோயாளிகள் போன்றோர் பணியமர்த்தப்படுவதை தவிர்க்க விரைவில் ஆணை பிறப்பிக்கப்படும். இதுமட்டுமில்லாமல், பள்ளிகளில் அடிப்படை வசதி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் புள்ளிவிவர அறிக்கை போன்றவற்றை தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் அனைத்து அரசுப்பணியாளர்களும்தான் நியமிக்கப்படுகின்றனர், அதனால் இதற்கென தனியாக தேர்தல் அலுவலர்களை நியமிப்பது தற்போதைய சட்ட அமைப்பின்படி இயலாத காரியம்" என்றார்.
தேர்தல் நேரம்! ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ளப்படுவார்களா?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.