கோவை பகுதியில் கடந்த சில மாதங்களாக நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த யானைகள் இறப்பு, வன உயிரின ஆர்வலர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்னுமொரு பெண் யானை தரையில் மயங்கி விழுந்து, உயிருக்கு போராட... சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் கோவை மக்கள்.
ஊருக்குள் யானை நுழைகிறது. விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது என யானைகள் மீது புகார் பட்டியல் வாசிக்கும், யானைகளை தொந்தரவாக கருதும் வனத்தையொட்டிய கிராம மக்களைக்கூட கடந்த இரு தினங்களாக ஒருவித சோகத்தில் ஆழ்த்தியது அந்த யானை. உடல் நலிவுற்று மயங்கி கிடந்த 30 வயது மதிப்புடைய அந்த பிரம்மாண்ட பெண் யானை, உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பது பெரும்பாலனோரின் விருப்பமாகவும், வேண்டுதலாகவும் இருந்தது.

மறுபுறம் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர். யானை நீண்ட நேரம் படுத்துவிட்டால், அது உயிர் பிழைப்பது என்பது சிரமம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தாலும், மறுபுறம் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. உடலில் காயங்கள் எதுவும் இல்லை. சாப்பிட்ட உணவில் தான் பிரச்னை இருக்கும்' என சொல்லப்பட்டது.
குளுகோஸ், இஞ்சி, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கும்கி யானை பாதுகாப்புடன் கடந்த இரு தினங்களாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கும்கி யானையை கொண்டு யானையை எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது பலனளிக்கவில்லை. கிரேன் மூலம் யானையை தூக்கி நிறுத்தும் முயற்சிகளும் முதலில் பலனளிக்கவில்லை. தொடர்ச்சியாக குளுக்கோஸ் போன்ற சத்து உணவுகள் கொடுக்கப்பட்டதால் வியாழக்கிழமை இரவு யானைக்கு உடல்நலம் சற்று தேறியது. இதையடுத்து கிரேன் உதவியுடன் யானை தூக்கி நிறுத்தப்பட்டது. மிகவும் வலுவிழந்த நிலையில் இருந்த யானை மெதுவாக வனத்தை நோக்கி நகர்ந்தது.

யானையின் உயிருக்கு இனி ஆபத்தில்லை. யானை மெதுவாக வனத்துக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். யானை உடல்நலம் திரும்பியதாக சொல்லப்பட்டது வன உயிரின ஆர்வலர்களிடம் மட்டுமல்லாது, பொதுமக்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே நடந்தது. இந்நிலையில், அந்த யானை மீண்டும் மயங்கி தரையில் வீழ்ந்தது. வனத்தையொட்டிய பகுதியில் யானை மயங்கி விழுந்துள்ளது. யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியை துவங்கி இருக்கிறார்கள். யானை உடல்நலம் பெற்று, வனத்துக்குள் திரும்ப வேண்டும் என பொதுமக்கள் வேண்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக வனத்துறையினரிடம் பேசினோம். "எழுந்து மெதுவாக நடந்த யானை மீண்டும் மயங்கியுள்ளது. மீண்டும் சிகிச்சை அளிக்கத்துவங்குகிறோம். யானை மீண்டும் படுத்துவிட்டதால் அது முழுமையாக உடல்நலம் திரும்புமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்," என்றனர்.
யானையைக் காப்பாற்ற தொடர்ச்சியான முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த யானை மீண்டும் எழ வேண்டும்.. நலம் பெற வேண்டும் என்பது தான் கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.