அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன், அதுதொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்திருந்தார். இதனை அடுத்து லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகம், அவர் இணைய வசதியைப் பயன்படுத்த முடியாமல் முடக்கியுள்ளது.
விக்கிலீக்ஸின் பத்தாமாண்டு தொடக்க விழாவில் பேசியபோது, நவம்பர் 8-ம் தேதி நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த சில முக்கியமான ஆவணங்களை வெளியிட உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த ஆவணம் பல முக்கிய சந்தேகங்களுக்கு பதிலாக அமையும் என தெரிவித்ததுடன், போர், ஆயுதங்கள், எண்ணெய், கூகுள், மக்கள் கண்காணிப்பு குறித்த முக்கிய ஆவணங்களை ஒன்றன்பின் ஒன்றாக தினமும் வெளியிட உள்ளோம் என்றார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளின்டனின் 20 ஆயிரம் மின்னஞல்களை விக்கிலீக்ஸ் ஜூலை மாதத்தில் வெளியிட்டது. அது அமெரிக்க அரசியலில் மிகப்பெரும் விவாதத்தையும் குழப்பத்தையும் கிளப்பியது. ஹிலரி கிளின்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவர் குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் ஹிலரி கிளின்டனையும், டொனால்ட் ட்ரம்பையும் நினைத்து வருந்துகிறேன். தங்களுடைய குறிக்கோள்களால் துன்புறுத்தப்படும் இரண்டு நபர்கள் அவர்கள்” என்று அசாஞ்சே பதிலளித்தார்.
ஏற்கெனவே அரசு மற்றும் கார்ப்பரேட் ரகசியங்களை அம்பலப்படுத்தியதற்காக, பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசாஞ்சேவை நாடு கடத்த திட்டமிட்டது அந்நாட்டு அரசு. ஆனால் அவரோ நாடு கடத்தப்படுதலில் இருந்து தப்பிக்க லண்டனில் தங்கியிருக்கிறார். இந்த நிலையிலும் தொடர்ந்து பல ஆதாரங்களை அம்பலப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய இணைய உரிமை பறிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தூதரகத்தில் அவருக்கு இணைய வசதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த ஈக்வடோர், அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் செய்யும் தலையீடுதான் காரணம் என்று கூறியுள்ளது.
மேலும் ஈக்வடோர் தனது அறிக்கையில் அசாஞ்சேவுக்கு பாதுகாப்பு அடிப்படையில் அடைக்கலம் கொடுத்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, வெளியுறவு கொள்கையின் அடிப்படையில் தேர்தல் சமயத்தில் இதுபோன்று ஆவணங்கள் வெளியிடப்படுவது அரசியல்ரீதியாக பெரும் பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இணைய வசதி மறுக்கப்பட்ட அசாஞ்சே, தான் கூறியுள்ளபடி ஆவணங்களை எப்படி வெளியிடப் போகிறார் என்பதே அமெரிக்க அரசியலை உற்று நோக்குபவர்களின் கேள்வியாக இருக்கிறது!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.