முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அவர் இன்னும் கிரிட்டிக்கல் நிலையை தாண்டவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் தான் லண்டன் மருத்தவர், ரிச்சர்ட் பேல் கடந்த வியாழயனன்று மீண்டும் சென்னை வந்தவர், நான்கு நாட்கள் சென்னையில் முகாமிட்டு அப்போலோவில் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவருடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவும் இணைந்து மருத்துவம் பார்த்தனர். ரிச்சர்ட் பேல் சிகிச்சைக்கு பிறகே ஜெயலலிதாவின் உடல் நிலையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து அப்போலோ தரப்பும், சசிகலாவும், 'இவர் தொடர்ந்து சிகிச்சை தந்தால் முன்னேற்றம் ஏற்படும்' என சொல்லியுள்ளார்கள்.
ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனது முதல், அப்போலோ வாசலே அம்மன் கோவில் வாயில்போல, தினமும் ஒவ்வொரு பூஜைகளாக நடைபெற்று வருகிறது. மதவேறுபாடுகளை கடந்து அனைத்து மதத்தின் சார்பிலும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் தோறும் உள்ள ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.அப்போலோ வாயிலில் கடந்த சில நாட்களாக கோகுல இந்திரா தலைமையில் தான் துர்கா பூஜைகள் நடத்தபட்டன.
அப்போலோ மருத்துவமனைக்கு ராஜாத்தி அம்மாள் வருவது கடைசிவரை யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டனர். அவருடைய கார் எண்ணை வாயிலில் நின்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டதால், அவருடைய கார் நிற்காமல் உள்ளே சென்றது. நாற்பத்து ஐந்து நிமிடங்கள் அப்போலோவில் இருந்தார் ராஜாத்தியம்மாள்.
அப்போலோ மருத்துமனையில் முதல்வர் அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு உடல்நிலை சரியில்லாமல், தீடீர் என மருத்துவமனைக்கு வருகை தந்தார். முதல்வரை பாரக்க தான் இவர் வந்துள்ளதாக ஒரு தகவல் கிளம்ப, தனக்கு உடல்நிலை சரியில்லாமல் தான் இங்கு வந்துள்ளேன் என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்குள் சென்றார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ஜெயலலிதா பெயரில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில், பத்து நாட்கள் சிறப்பு அபிஷேகம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு கணிசமான தொகை மேலிடத்தில் இருந்து அனுப்பட்டுள்ளது. தினமும், அபிஷேகம் நடத்தி பிரசாதத்தை சென்னைக்கு அனுப்பி வையுங்கள் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள். சிரத்தையோடு இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள் சம்பந்தபட்ட நிர்வாகிகள்.
அப்போலோவிற்கு ஜெயலலிதாவை பார்க்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் வந்தார். அவருடைய கார் மருத்துவமனைக்குள் செல்லும் முன் தடுத்து நிறுத்திவிட்டார்கள் பாதுகாப்பு அதிகாரிகள். மேலிடத்தில் தொடர்பு கொண்டு இவர் வந்திருக்கும் விஷயத்தை பாஸ் செய்தபின், அவர்கள் அனுமதி கொடுத்ததும் தான் கார் உள்ளே சென்றது. இதனால் பத்து நிமிடம் வாசலில் காரிலே அமர்ந்து இருந்தார் இளங்கோவன்.

நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அவர் வருவதற்கு ஐந்து நிமிடம் முன்பு, அப்போலோ நிர்வாகி ப்ரீதா ரெட்டி வாயிலுக்கு வந்து கதவை திறக்க சொல்லி, தடுப்புகளை அகற்ற சொன்னார். அப்போது ஒரு கார் உள்ளே சென்றது 15 நிமிடங்கள் கழித்து அந்த கார் வெளியே வரும்போது தான் வந்தது ரஜினி என்பதை பத்திரிகையாளர்களே அறிந்தனர்.
அப்போலோவிற்கு எந்த விலையுயர்ந்த கார் வந்தாலும், பத்திரிகையாளர்கள் அதன் பின்னால் ஓடும் பரிதாபம் நடக்கிறது. யாராவது வி.ஐ.பி வந்துவிடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கைதான் இதற்கு காரணம்.
தி ஹிந்து ஆசிரியர் ராம், இரண்டாவது முறையாக அப்போலோவிற்கு ஞாயிறு அன்று வருகை தந்தார். முதல்வரை இரண்டாவது முறையாக பார்க்க வந்துள்ளார் என்று அவரை பத்திரிக்கையாளர்கள் சூழ, 'எனது உறவினர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரை காண்பிக்க வந்தேன்' என்றார்.
அப்போலோ வாயில் அதிமுகவின் சிலர் மட்டும் தினந்தோறும் காலையில் வந்து இரவு பணிமுடித்து வீட்டுக்கு செல்வதுபோல் செல்கின்றார்கள். குறிப்பாக, குண்டுக்கல்யாணம் தனது மகளோடும், பாத்திமாபாபு.சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும், விருதுநகர் பொன்னுசாமி,மாற்றுதிறனாளி மணிகண்டன், தலைமை நிலையத்தில் பணிபுரிந்த பிலால் என்பவரும், மகளிர் அணி லில்லி ஆகியோரும் நாள் தவறாமல் ஆஜராகும் நபர்கள்.
கடந்த வாரம் எஸ்.வி சேகர் வந்தபோது மேலிடத்தில் அனுமதி தந்தபின்தான் அனுமதிப்போம் என கார்டன் வட்டாரத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் கூறினர். மேலிடத்தை கேட்டுச்சொன்னவர்கள் அவரது காரை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் நடந்துவரச் சொல்லினர். கோபமடைந்த எஸ்.வி சேகர் இது மருத்துவமனை வளாகம். இங்கு நீங்கள் ஏன் உத்தரவிடுகிறீர்கள். நான் முன்னாள் எம்.எல்.ஏ...மத்திய அரசின் தணிக்கைத்துறை உறுப்பினர் என டோஸ் விட்டபின்தான் பதற்றமாக அவரை உள்ளே அனுமதித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.