உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்துவரும் நேரத்தில் 'நல்ல சரக்கு கொடுங்க சார்' என்று தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கம் மனு கொடுத்துள்ளது.
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமனை சங்கத்தின் மாநில தலைவர் செல்லபாண்டியன் சந்தித்து மனு கொடுத்துள்ளார். அதில், தேர்தல் நேரத்தில் மது இலவசமாக கிடைப்பதால் புதியதாக குடிமகன்கள் உருவாகுகின்றனர். மது விற்பனையும் அதிகரிக்கிறது. இதைப்பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளில் போலி சரக்குகள் அதிகளவில் விற்கப்படுகின்றன. எனவே அதை தடுக்க அனைத்து கடைகளிலும், பார்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
செல்லபாண்டியனிடம் பேசினோம். "டாஸ்மாக் கடைகளில் 150க்கும் மேற்பட்ட மது வகைகள் உள்ளன. மதுபிரியர்களுக்கு பிடித்த சரக்குகள் மட்டுமே கடைகளில் விற்க வேண்டும். தேர்தல் சமயத்தில் மதுபிரியர்களுக்கு பிடிக்காத சரக்குகள் உள்ளன. போலி சரக்குகளும் உள்ளன. உயிர் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும். வேட்பாளர்களின் செலவு கணக்கில் மது வாங்கி கொடுத்ததையும் கொண்டு வர வேண்டும். தரமான சரக்குகள் கிடைக்க பில் கொடுக்க வேண்டும்" என்றவரிடம் அ.தி.மு.க.வுக்கு ஏன் ஆதரவு என்று கேள்வி கேட்டோம். அதற்கு அவர், "கடந்த சட்டமன்ற தேர்தலில் மதுவை எதிர்த்து தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் போராடின. இதனால் அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகியை சந்தித்தோம். ஆனால் அவர், எங்களை அலட்சியப்படுத்தி விட்டதால் ஆதரவு அளிக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.
மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டாஸ்மாக் மொத்த வருவாயில் லாபத்திலிருந்து நிதி வழங்க வேண்டும். 234 தொகுதிகளிலும் மது குடிப்போர் சிகிச்சை பெற தனி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நீண்ட காலமாக வைத்து வருகிறோம். மேலும் கள்ளசாராயம் தொழில் செய்தவர்களுக்கு அவர்களின் மறுவாழ்வுக்காக அரசு நிதி ஒதுக்குகிறது. இதுபோல உயிரைப் பணையம் வைத்து குடிப்பவர்களுக்கும் மறுவாழ்வுக்காக நிதி வழங்கப்பட வேண்டும். மதுபானங்களுக்கு இன்சுரன்ஸ் செய்யும் அரசு, மதுகுடிப்போருக்கும் இன்சுரன்ஸ் செய்ய வேண்டும்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.