ஒரு சிப்பெட்டோடு நின்றுவிடாமல் 100 சிப்பெட்களை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசு எண்ணம் என்று மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் நிறுவனத்தை, டெல்லிக்கு மாற்றும் முடிவை மத்திய ரசாயனத்துறை அமைச்சகம் எடுத்தது. இதனை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாக எதிர்த்தன. இந்தநிலையில் கிண்டியில் இருந்து சிப்பெட்டை மாற்றும் முடிவில் மத்திய அரசு இல்லை' என மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமையகம் சென்னையில் தொடரும். அதேசமயம் மற்றொரு தலைமையகமும் டெல்லியில் உருவாக்கப்படும். சிப்பெட் நிறுவனத்தின் கீழ் இருந்த 23 கிளைகள் இரண்டு ஆண்டுகளில் 39 சிப்பெட் நிறுவன கிளைகள் உயர்ந்துள்ளது. 16 சிப்பெட் கிளைகள் மோடி அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் சிப்பெட் கிளைகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிப்பெட் கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்திலிருந்து 65 ஆயிரமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பயிற்சிபெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 1 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்கு.

சென்னை சிப்பெட் தலைமையகம் தொடரும் அதே சமயத்தில் மற்றொரு தலைமையகம் அமைப்பதற்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. (Alternative HQ in Delhi also) ஒரு தலைமையகம் மட்டும் இல்லாமல் மாநிலங்களில் Regional HQ தொடங்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஒரு சிப்பெட்டோடு நின்றுவிடாமல் 100 சிப்பெட்களை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசு எண்ணம். அதற்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. அமைச்சக செயலாளர்களுடன் நானும் அமைச்சகத்தில் இடம் பெற்றுள்ள இணை அமைச்சரும் இதுதொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.
யாரும் மத்திய அரசின் இந்த முடிவை தவறாக எடுத்து கொள்ளக் கூடாது. மத்திய அரசு அதிகமான சிப்பெட்டை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். சென்னை சிப்பெட் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக விரைவில் வேதியல் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவிய சென்னை வர உள்ளார். சென்னை சிப்பெட் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும்" என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.