பொதுமக்கள் நிதி திரட்டி போட்டிக்கு அனுப்பிய தண்ணீர் லாரி டிரைவர் ஒருவர் மிஸ்டர். ஆசியா ஆகி இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.
பெங்களூரு வர்தூரை அடுத்த ராமகவுண்டஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. வொயிட்பீல்ட் பகுதியில், பாலகிருஷ்ணனை அடிக்கடி பார்க்க முடியும். இங்குதான் அவர் தினமும் லாரியில் தண்ணீர் சப்ளை செய்வார். பாடி பில்டரான பாலகிருஷ்ணா சத்தமில்லாமல் ஆணழகன் போட்டிக்குத் தயாராகி வந்தார். மிஸ்டர். யூனிவர்ஸ் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. தண்ணீர் லாரி டிரைவராக இருந்து கொண்டே,அதற்காக தன்னை பாலகிருஷ்ணா தயார் படுத்தி வந்தார். காலையில் வீடு வீடாகச் சென்று தண்ணீர் சப்ளை செய்துவிட்டு மற்ற நேரங்களில் ஜிம்மில்தான் இருப்பார். 'ஒயிட்பீல்ட் அர்னால்ட் ' என்றுதான் அந்த பகுதி மக்கள் பாலகிருஷ்ணாவை அழைப்பார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்ட பாலகிருஷ்ணா , குடும்பத்தையும் காப்பாற்றி வந்தார்.
அவரது கடும் உழைப்புக்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது. சினிமா ஹீரோ போல இருக்கும் 25 வயது பாலகிருஷ்ணாதான் இப்போது மிஸ்டர். ஆசியா. பிலிப்பைன்சில் நேற்று நடந்த மிஸ்டர். ஆசிய ஆணழகன் போட்டியில் சாம்பியனாகி சாதனை படைத்துள்ளார் பாலகிருஷ்ணா. மணிலாவில் 35 ஆயிரம் மக்கள் முன்னிலையில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியுள்ளார் பாலகிருஷ்ணா. வெற்றி குறித்து அவர் கூறுகையில், ''எனது வெற்றியை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதே அவரை இழந்து விட்டேன். கடந்த 10 வருடங்களாக தண்ணீர் லாரி ஓட்டி வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொழில்முறையிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்று வருகிறேன். ஆனால் அதற்காக நான் பட்ட கஷ்டங்களை சொல்லி மாள முடியாது. ஸ்பான்சர்ஷிப் கிடைத்தால் என்னால் மிஸ்டர். யூனிவர்ஸ் கூட ஆக முடியும் என்றார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல பாடி பில்டிங் பயிற்சியாளர் சங்கலா சோக்ராம்தான் பாலகிருஷ்ணாவுக்கு பயிற்சியாளர். தனது பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்துள்ள பாலகிருஷ்ணா மேலும் கூறுகையில், '' தண்ணீர் லாரி ஓட்டியதால் கிடைத்த கூடுதல் வருமானத்தில் என்னால் ஓரளவுக்கு நல்ல சத்துமிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள முடிந்தது. தினமும் இரு வேலை பார்ப்பேன். காலையில் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்வேன். மாலையில் ஜிம்மில் இன்ஸ்ட்ரக்டராக பணியாற்றுவேன். தினமும் 6 மணி நேரம் உழைத்தேன். எனது தாயார் பர்வதம்மா, சகோதரர் ராஜு ஆகியோர் எனக்கு உதவியாக இருந்தனர்.

பாடி பில்டிங்கிற்கு புரதச்சத்து மிகுந்த உணவுகள் அதிகளவு எடுக்க வேண்டும். தினமும் 750 கிராம் சிக்கன், 25 முட்டைகள், 300 கிராம் அரிசி உணவு, 200 கிராம் மீன் உணவுகளை எடுத்துக் கொண்டேன். இந்த உணவெல்லாம் போதவில்லை. எனது நிலையை கண்ட வொயிட்பீல்டு மக்கள்தான் நிதி திரட்டினர். இப்போது பிலிப்பைன்ஸ் வருவதற்கு கூட வொயிட்பீல்டு பகுதி மக்கள்தான் நிதி திரட்டி அனுப்பினர். அவர்கள் தந்த பணத்தில்தான் பிலிப்பைன்ஸ் வந்தேன். இப்போது அந்த மக்களின் நம்பிக்கையை காப்பற்றி விட்டேன்'' என்கிறார் பெருமிதத்துடன்.
கடந்த 2013-ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த 24 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பாலகிருஷ்ணா மிஸ்டர் ஆணழகன் ஆனார். அடுத்த ஆண்டு ஏதென்சில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதே பிரிவில் பட்டம் வென்றார்.
பாலகிருஷ்ணா போன்ற திறமையாளர்களை விளையாட்டுத்துறை அமைச்சகம் ஊக்குவிக்க வேண்டுமென்பதுதான் விளையாட்டு ஆர்வலர்களின் ஆசை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.