Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 15, 2016

அரசு அதிகாரியாக்க வேண்டும் என்ற கனவு தகர்ந்தது: மகளின் சடலத்தை பார்த்து கதறிய பெற்றோர்


தோழிகளின் சடலத்தைப் பார்த்து மயங்கிய மாணவிகள்

தண்ணீர் லாரி மோதிய விபத்தில் பலியான 3 மாணவிகளும் ஏழ்மை நிலையில் கல்லூரிக்குச் சென் றுள்ளனர். அவர்களின் சடலத்தைப் பார்த்து பெற்றோர்கள், சக மாணவிகள் கதறி அழுதது பரி தாபமாக இருந்தது.

திருவொற்றியூர் ராஜாஜி நகர் கம்பர் 1-வது தெருவை சேர்ந்தவர் சித்ரா (19). கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவி. தந்தை லோக நாதன். கேன்டீன் ஒன்றில் சப்ளை யராக பணி செய்து வருகிறார். தாயார் கற்பூரம் வியாபாரம் செய் கிறார். ஏழாம் வகுப்பு படிக்கும் திவ்யா என்ற தங்கை சித்ராவுக்கு உள்ளார்.

தினமும் திருவொற்றியூரி லிருந்து சென்ட்ரலுக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து பூங்கா ரயில் நிலையத்துக்கு நடந்து சென்று, அங்கிருந்து கிண்டி ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் மூலம் சென்று கல்லூரியில் படித்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

புளியந்தோப்பு நரசிம்மன் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ஆஷா ஸ்ருதி (19). மூன்றாம் ஆண்டு கல் லூரி மாணவியான இவரது தந்தை கார் டிரைவர். தினமும் அரசு பஸ் மூலம் பூங்கா ரயில் நிலையம் சென்று அங்கிருந்து கிண்டிக்கு மின்சார ரயில் மூலம் கல்லூரிக்குச் சென்றுள்ளார். 11-ம் வகுப்பு படிக்கும் தம்பி ஒருவர் உள்ளார்.

போரூர் ஆலப்பாக்கம் திரு முருகன் நகரைச் சேர்ந்தவர் காயத்ரி (20). தந்தை டீக்கடை வைத் துள்ளார். இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. தாயார் வீட்டில் உள்ளார்.

கதறி அழுத மாணவிகள்

பலியான 3 மாணவிகளின் சடல மும் ஒரே ஆம்புலன்ஸில் பிரேதப் பரிசோதனைக்காக மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்கு முன் னரே கல்லூரி மாணவிகளும் தோழிகளும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு திரண்டு வந்து கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தனர். மாணவிகளின் சடலங் கள் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்டபோது அனைத்து மாணவிகளும் தலையிலும், வாயிலும் அடித்தவாறு கதறி துடித்தனர். சிலர் மயக்கம்போட்டு விழுந்தனர்.

அடையாளம் தெரியாமல் தவிப்பு

விபத்தில் பலியானது யார்? காயம் அடைந்தது யார்? என்ற விவரம் மாணவிகளுக்கு உடனடியாக தெரியவில்லை. அனைவரும் எந்த மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது என ஒருவரை ஒருவர் சோகத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

அப்போது மருத்துவமனை ஊழியர்களும், வழக்குப் பதிவு செய்துள்ள கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரும் பலியான மாணவிகளின் பெயரை தனித்தனியாக குறிப்பிட்டு அடையாளம் காட்டும்படி அழைத்தனர். அப்போது உள்ளே சென்ற மாணவிகள் சடலமாக கிடந்த மாணவிகளின் சிதைந்த உடலை பார்த்து கூச்சலிட்டனர். சிலர் வெளியே வந்து மயங்கி விழுந்தனர்.

மாணவிகளுடன் வந்த பெற்றோர்

3 மாணவிகள் பலியானதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந் தனர். தங்களது மகள் அழுது புலம்பியதைப் பார்த்த மாணவி களின் பெற்றோர்களும் திரண்டு சென்றனர். அவர்கள் மாணவிகளை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்களின் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை.

பலியான மாணவி சித்ராவின் உறவினர் பாஸ்கர் கூறும்போது, “சித்ராவை அவரது பெற்றோர் கூலி வேலை செய்து படிக்க வைத்தனர். அவரை அரசு அதி காரியாக்க வேண்டும் என்று கனவு கண்டனர். பண வசதி இல்லாததால் சித்ராவுக்கு செல் போன் கூட வாங்கி கொடுக்க முடியவில்லை.

தற்போது நடந்து முடிந்துள்ள ஆயுத பூஜை அன்று சுருக்கெழுத்து பயிற்சி வகுப்பில் சேர்த்தோம். ‘நான் அரசு அதிகாரியான பின்னர் அனைவரையும் உட்கார வைத்து சாப்பாடு போடுவேன்’ என்று அடிக்கடி கூறுவார். ஆனால், சித்ராவை இப்படி சடலமாக பார்ப்போம் என்று நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை” என்று கூறி கண்ணீர் வடித்தார்.

டிரைவர் கைது

விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன் (42) கைது செய்யப்பட்டுள்ளார். தூத் துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 8 ஆண்டுகளாக லாரி டிரைவர் உள்ளார். இன்று காலை 10 மணிக்கு பலியான மாணவி களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து ராஜேந்திரன் கூறியதாக கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் கூறியதாவது:

கிண்டியில் இருந்து சைதாப் பேட்டை நோக்கி தண்ணீர் லாரியை ஓட்டிச் சென்றேன். கிண்டி பாலத்தில் ஏறி இறங்கிய போது லாரி திடீரென எனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், என்ன செய்வது என்று எனக்குப் புரியவில்லை.

உடனடியாக கியர்போட்டு லாக் செய்யலாம் என்று கியர் லாக் போட்டேன். ஆனால், லாரி நிற்கவில்லை. வலது புறத்தில், அதிக அளவில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தது. இதனால், பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் என நினைத்து இடதுபுறம் திரும்பினேன்.

மாணவிகள் சிதறி ஓடிவிடு வார்கள் என நினைத்தேன். ஆனால், அது வேறுவிதமாக நடந்துவிட்டது என்று ராஜேந்திரன் கூறியதாக போலீஸார் தெரி வித்தனர். மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.