Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 4, 2016

5 வருடங்களில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம்:


இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாக தொழிலாளர் பணியகம் (Labour Bureau) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2015 ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் வரை நாடுமுழுவதும் உள்ள 1.6 லட்சம் வீடுகளில் உள்ள 7.8 லட்சம் பேர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்ப்பார்த்தபடி கிராமங்களை விட நகரங்கள் அதிக வருமானம் தரக்கூடிய வேலைகளை வழங்குவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. நகரங்களில் 82% வேலை தேடுபவர்களுக்கு வருடம் முழுவதற்குமான வேலை கிடைத்துவிடுகிறது என்றும் ஆனால் கிராமங்களில் வெறும் 53% பேருக்கு தான் இத்தகைய வேலைகள் கிடைக்கின்றன என்று தெரிய வந்துள்ளது.
கிராமங்களில் உள்ள 42% பேர் வருடத்திற்கு 12 மாதங்களுக்கும் குறைவாக வேலையில் உள்ளனர். இது பருவகால விவசாயத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இதனால் 77% கிராமங்களில் உள்ள குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ₹10000 க்கும் குறைவாகத்தான் இருக்கிறது என்றும் நகரங்களில் பாதி குடும்பங்களின் வருமானம் ₹10000 இல் இருந்து ₹50000 வரை இருக்கின்றது என்றும் தெரியவந்துள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்று புதிய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஒரு வருடம் ஆன பிறகும் வேலைவாய்ப்பு குறித்த நிலைமை முந்தைய அரசைப் போல மிக மோசமாகத்தான் உள்ளது.
15 வயதிற்கு மேலான தொழிலாளர் சக்தி இந்தியாவில் 45 கோடி இருகின்றது. இதில் 5% பேர் வேலையின்றி உள்ளனர். 45 கோடியில் 5 சதவிகதம் என்பது 2.3 கோடியாகும். 35% பேர் தங்கள் தகுதிக்கு சரியான வேலை கிடைக்காமல் உள்ளனர். மேலும் வருடத்தில் சில மாதங்கள் மட்டும் வேலை செய்வோரும் உள்ளனர். இவர்கள் மறைமுகமான வேலையற்றவர்கள். இவர்களையும் சேர்த்தால் வேலையற்றவர்களின் எண்ணிக்கை 16 கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது. மேலும் தற்போது வேலை செய்வோரில் 47% சுயதொழில்களில் ஈடுபடுபவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள், கடை வைத்திருப்பவர்கள், சிறு நிறுவன உரிமையாளர்கள் ஆவர். இந்த வர்க்கத்தினரின் குறைவான பொருளாதார நிலையினால் இவர்களின் மாத சராசரி வருமானமும் ₹10000 க்கும் குறைவாகவே உள்ளதாக தெரியவருகிறது.

தொழிலாளர் பணியகத்தின் முந்தைய ஆய்வறிக்கைகளை ஒப்பிடும் போது வேலையில்லா திண்டாட்டம் 2011 3.8% ஆகவும், 2013 இல் 4.9% ஆகவும் இருந்துள்ளது. இந்த காலங்கள் பொருளாதார மந்தநிலை காணப்பட்ட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த பொருளாதார நிலையில் 2015-2016 இல்  7.3% உயர்வு என்று பதிவாகிய போதும் வேலைவாய்ப்பு மோசமடைந்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க மோடி அரசு அறிவித்த START UP INDIA, DIGITAL INDIA, MAKE IN INDIA ஆகிய திட்டங்கள் எந்த பயனையும் தரவில்லை என்றே தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.