Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 23, 2016

பிபிசி விருது பெற்ற இந்திய புகைப்படம் சொல்லும் கதை!


இந்தியாவைச் சேர்ந்த வன உயிரின புகைப்படக் கலைஞர்கள்  நயன் கனோல்கர், கணேஷ் ஹெச். சங்கர் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான  கவுரவமிக்க பிபிசி விருது கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிபிசி சார்பில் சிறந்த வனஉயிரின புகைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 95 நாடுகளில் இருந்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 'அர்பன் வைல்டு லைஃப்' புகைப்படப் பிரிவில் மும்பையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் நயன் கனோல்கருக்கு விருது கிடைத்துள்ளது. மும்பை ஆரே காலனி பகுதியில் வீடுகளுக்கு அருகே சுற்றித் திரியும் சிறுத்தைப்புலியை மின் விளக்கு வெளிச்சத்தில்  நயன் கோல்கருக்கு அற்புமான முறையில் பதிவு செய்திருந்தார்.



பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு புகைப்படக் கலைஞர் கணேஷ் ஹேச். சங்கர் பறவைகள் பிரிவில் அற்புதமான முறையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். மரத்தில் கிளி வசிக்கும் பொந்துக்குள் பெரிய பல்லி புகுந்து இடம் பிடிக்கப் பார்க்கிறது. தனது உறைவிடத்துக்குள் புக முயற்சிக்கும் பல்லியை விரட்ட கிளி போராடும் தருணத்தை மிக தத்ரூபமாக பதிவு செய்திருந்தார் கணேஷ். பறவையியல் பிரிவில் இந்த புகைப்படம் விருதை தட்டிச் சென்றுள்ளது. ராஜஸ்தானில் பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் இந்த புகைப்படத்தை கணேஷ் ஹெச். சங்கர் எடுத்திருந்தார்.

விருது வென்றது குறித்து கணேஷ் ஹெச். சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''விருது அறிவிப்பு வெளியானதில் இருந்து எனக்கு வாழ்த்துக்களை குவித்து வரும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.







இந்த ஆண்டுக்கான சிறந்த வனஉயிரின புகைப்படமாக அமெரிக்க புகைப்பட கலைஞர்  டிம் லாமேனின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில்  அருகி வரும் உயிரினமான போர்மேன் உராங்குட்டான்  உயரமான மரத்தில் கஷ்டப்பட்டு ஏறுவதை தொடர்ச்சியாக 7 படங்கள் மூலம் விளக்கியிருந்தார் டிம்.

விருது வென்ற புகைப்படங்கள் லண்டன் நேச்சூரல் ஹிஸ்டரி மியூசியத்தில் கண்காட்சிக்கு வைக்கப்படும். பிபிசி இணையதளத்திலும் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல் மிஸ் பண்ணக்கூடாத புகைப்படங்கள் என்று புகைப்பட ஆர்வலர்களின் லிஸ்டில் இவையும் நிச்சயம் இடம்பெறும்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.