Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 7, 2016

' துணை முதல்வர் பதவி?!' -அப்போலோவில் விவாதித்த அமைச்சர்கள்


அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டன. ' அரசின் முக்கிய அலுவல்களை கவனிப்பதற்காக துணை முதல்வர் நியமிக்கப்படலாம்' என கோட்டை வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். தற்போது எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒன்று, முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. முதல்வர் உடல்நலன் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிடும் தகவல்கள் மட்டுமே, தொண்டர்கள் மத்தியில் ஆறுதல் அளித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக அரசு அலுவல் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல், தலைமைச் செயலக அதிகாரிகள் திணறி வருகின்றனர். " அமைச்சர்கள் யாரைச் சந்திக்கச் சென்றாலும், ' அம்மா உடல்நலமில்லாமல் இருக்கிறார். இந்தநேரத்தில் எதைப் பற்றியும் பேச வேண்டாம்' என ஒதுங்கிக் கொள்கின்றனர். துறைரீதியான பணிகளைவிடவும், முதல்வரின் உடல்நலம் குறித்த விவாதத்திலேயே அமைச்சர்களின் நேரம் கழிகிறது. முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனும் மருத்துவமனையிலேயே இருக்கிறார். பல முக்கிய முடிவுகளுக்கு முதல்வரின் கையெழுத்தில்லாமல் பணிகள் தாமதமாகிறது" என ஆதங்கப்பட்ட தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், தொடர்ந்து,

" முதல்வர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ஃபைல்கள் தேங்கிக் கிடக்கின்றன. முதல்வரின் கையெழுத்து மிக அவசியம். ஆனால், தற்போது முதல்வரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், இன்னும் பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள். அதன்பிறகும், முதல்வர் தீவிரமாக பணியில் ஈடுபடுவதற்கு காலதாமதம் ஆகலாம். இதற்காக, துணை முதல்வர் பதவியில் ஒருவரை அமர்த்துவதற்கான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டால், அரசு அலுவல் தொடர்பான சிரமங்களைக் களைய முடியும் என முதல்வரின் ஆலோசகர்கள் உறுதியாக இருக்கின்றனர். துணை முதல்வர் ரேஸில் பல பெயர்கள் அடிபடுகின்றன. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பெயர்கள் பேசப்படுவதாகவும் சொல்கின்றனர். சசிகலாவின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவர், துணை முதல்வர் பதவியில் நியமிக்கப்படலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம்" என அதிர வைத்தார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.