சதா வேலை வேலை என எந்நேரமும் டென்ஷனைக் கட்டிக்கொண்டு இல்லாமல், ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் என்பதே கூந்தலின் ஆயுளுக்கான முதல் பரிந்துரை. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனரின் தரமே கூந்தல் அழகு மற்றும் ஆரோக்கியத்துக்கான முக்கியக் காரணிகள். கூந்தல் பராமரிப்பின் முதல் படி, கேசத்தை அலசும் முறையே. எனவே, ‘ஷாம்பூ பாத்’துக்கான சரியான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம்..!
* தலைக்குக் குளிப்பதற்கு முன்னதாக, பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் கூந்தலை சீவவும். இதனால் குளித்த பின் கேசத்தை உலர்த்தும்போது சிக்கில்லாமல் தவிர்க்கப்படும்.
* அடுத்ததாக, வெதுவெதுப்பான நீரில் கூந்தலை நனைக்கவும். எப்போதும் பிராண்டட் ஷாம்பூ பயன்படுத்துவது நலம். அதை நேரடியாகத் தலையில் அப்ளை செய்து தேய்க்காமல், ஒரு பவுலில் தண்ணீர் சேர்த்து கலந்துகொண்டு, பின்னர் பயன்படுத்துவது சிறந்தது. இதன் மூலமாக, அதிலுள்ள கெமிக்கல்களின் வீரியம் நேரடியாக ஸ்கால்பில் வினைபுரிவது தவிர்க்கப்படும். ஷாம்பூவை தலை, கேசம் என மேலிருந்து கீழாகத் தேய்க்கவும். எதிரெதிர் திசையில் தேய்த்து சிக்காக்க வேண்டாம்.
* இப்போது குளிர்ந்த நீரில் கூந்தலை நன்கு அலசவும். பின்னர் சற்று தண்ணீர் வடித்துவிட்டு, கண்டிஷனர் அப்ளை செய்யவும். அதை ஸ்காப்பில் அப்ளை செய்யாமல், கேசத்தில் மட்டுமே அப்ளை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நுனி முடியில் மட்டுமே கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும் என்பது, சரும பாதுகாப்பு நிபுணர்கள் தரும் டிப் என்பதையும் கவனித்தில்கொள்ளவும்.
* கண்டிஷனரை 3 & 5 நிமிடங்கள் கூந்தலில் ஊறவிடவும். இது க்யூட்டிகிள்களை பலப்படுத்தும், கூந்தல் இழந்த ஜீவனை மீட்கும்.
* கண்டிஷனரை முழுவதுமாக அலசிய பின், கேசத்தில் கோத்திருக்கும் தண்ணீரை விரல்களால் மிருதுவாக வடித்துவிட்டு, பின்னர் துண்டினால் தலையை நன்கு சுற்றி, கூந்தலில் தங்கியிருக்கும் நீரை உறிஞ்சவிடவும். மாறாக, ஈர கேசத்தை துண்டினால் அடித்துக் காயவைத்தால் கூந்தல் சேதப்படும், உடையும், பலவீனமாகும் எச்சரிக்கை.
* கூந்தலை இயற்கையாகக் காயவைப்பதே சிறந்த வழி. ஹேர் டிரையர்கள் வெளிப்படுத்தும் வெப்பத்தால் கேசம் உடைந்துபோகும் என்பதோடு, அதன் பளபளப்பும் குறைந்துபோகும். மேலும், ஆயில் பாத், ஷாம்பூ பாத், கண்டிஷனர் என கூந்தலுக்காக நீங்கள் மேற்கொண்ட மெனக்கெடல்களின் பலன்களையும் ஒரு நொடியில் அது ஸ்வாகா ஆக்கிவிடும்.
கூந்தல் பத்திரம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.